நடிகை ஜோதிகாவுக்கு 35 வயது ஆகிறது. தனது பிறந்த நாளை நட்சத்திர ஓட்டலில் 'கேக்' வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் நெருங்கிய தோழிகள் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர். நடிகைகள் அனுஷ்கா, குஷ்பு, ராதிகா, லிசி, நதியா, தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் இந்த விருந்தில் பங்கேற்றனர். நடிகர் கார்த்தி, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சூர்யா மதுரையில் 'சிங்கம்-2' படப்பிடிப்பில் இருந்ததால் வரவில்லை. ஜோதிகா 1999-ல் வாலி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். குஷி, காக்கா காக்க, மன்மதன், சந்திரமுகி, மொழி படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
ஜோதிகாவுக்கும், சூர்யாவுக்கும் 2006-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.