பிரபுதேவாவுடனான காதல் விவகாரத்துக்கு முன்பெல்லாம் ஸ்பாட்டில் நிறையவே அரட்டையடிப்பார் நயன்தாரா. இதனால் மதிய இடைவேளை நேரங்களில் நயன்தாராவை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். ஆனால் சமீபகாலமாக அவர் யாரிடமும் அதிகமாக பேசுவதே இல்லை. டைரக்டர் தனது டேக்கை சொல்லி டயலாக் பேப்பரை கொடுத்ததும் அதை மனப்பாடம் செய்து நடித்து முடிக்கும் நயன்தாரா, யாருமே இல்லாத
ஒரு ஓரமாக சென்று அமர்ந்து விடுகிறார்.
அவர் அமர்ந்ததும், அவரது உதவியாளர் வந்து ஒரு புத்தகத்தை கொடுத்து செல்கிறார். அதில் ஏற்கனவே படித்து விட்ட பக்கத்தை புரட்டி, தொடர்ச்சியை படிக்கத் தொடங்கி விடுகிறார். அந்த சமயத்தில் உதவியாளர்கள்கூட அவர் அருகில் செல்வதில்லை. இப்படி நயன்தாரா தனிமையில் அமர்ந்து படிப்பது கதை புத்தகங்கள் இல்லையாம். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஆங்கில புத்தகங்களாம். இதையடுத்து நயன்தாராவை அனைவரும் அதிக மரியாதையுடனும் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.