நான் இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். முதல் படத்திலேயே வெற்றி நாயகன் ஆன நடிகர் உதயநிதி ஜோடியாக புதிய படமொன்றில் கமிட் ஆகியிருக்கும் நயன்தாராவை தேடி வரும் புதிய படங்கள் அனைத்திலும் கவர்ச்சி கேரக்டர்தான் இருக்கிறதாம். இதனால் கடுப்பாகியிருக்கும் நயன்தாரா, கவர்ச்சியாக இனி நடிக்க மாட்டேன், என கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போது
தமிழ், தெலுங்கில் உருவாகும் ஆங்காரம், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்கள் கவர்ச்சியாக நடிக்க கேட்கின்றனர். நான் இனி கவர்ச்சி பதுமையாக நடிக்க மாட்டேன் எனக் கூறி அவர்களை அனுப்பி விட்டேன். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் மட்டுமே இனி நடிக்க முடிவு செய்துள்ளேன், என்று கூறியுள்ளார்.