பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான மொபைல் மென்பொருட்கள்


தற்போதுள்ள சூழ்நிலைகளில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் இன்றியமையாததாகும். பெண்கள் தான் இதைப்படிக்கவேண்டும் என்பது அல்ல. நீங்கள் ஆணாக இருந்தால் உங்கள் அன்னையோ, துணைவியோ, தோழியோ கூட அவசர நேரங்களில் இதைப் பயன்படுத்தலாமல்லவா? நாங்கள் இங்கே வரிசைப்படுத்தியுள்ள இந்த சிறந்த அப்ளிகேசன்கள் உங்களுக்கு பக்கத்தில் உள்ளவர்கள்
, பிடித்தமானவர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு நீங்கள் ஆபத்தில் உள்ளீர்கள் என்பதைத் தெரியப்படுத்தும்.

பிசேஃப் [BeSafe]:
இது ஒரு GPS முறையைப்பயன்படுத்தும் பாதுகாப்பு அலாரம். இது ஆபத்து நேரங்களில் SOS என்ற குறுஞ்செய்தி முறை மூலமாக முன்னரே குறிப்பிட்ட தொலைப்பேசி எண்களுக்கு ஆபத்தை தெரியயப்படுத்தும்.

உங்களுக்கு பக்கத்தில் உள்ளவர்கள், பிடித்தமானவர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் தொலைப்பேசி எண்களைக்கூட பதிந்து வைத்துக்கொள்ளலாம்.

ஒரு சிவப்பு பொத்தான் போன்ற அமைப்பு திரையில் இருக்கும் அதை அழுத்தினால் உடனே SMS அல்லது கால் சம்பந்தப்பட்டவர்களுக்கு செல்லும். 



லைப் 360 பேமிலி லோக்கேட்டார் [Life 360 Family Locator]:

இதுவும் பிசேஃப் போன்றே GPS தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்துகிறது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தற்போதைய இடத்தை GPS, WiFi மற்றும் மொபைல் ட்ரையாங்குலேசன் உதவியுடன் தெரிந்துகொள்ளலாம்.

இதையும் தாண்டி சாதாரண மொபைல் போன் வைத்துள்ளவர்களும் பயன்படுத்தும் வகையில் SOS என்ற முறை மூலமாக ஆபத்து நேரங்களில் குறுஞ்செய்திகள் அனுப்பமுடியும்.

இதிலும் ஒரு பொத்தான் இருக்கும் அதை அழுத்தினாலே போதுமானது. 



சர்கிள்ஆஃப் 6: [Circle Of 6]

பெயரிலிருந்தே தெரிந்திருக்குமல்லவா? ஆம். இதில் ஒரு சிலரை மட்டும் கொண்ட ஒரு குழுவை உருவாக்கிக்கொள்ளலாம். இந்த குழுவில் மொத்தம் 6 நம்பத்தகுந்த நண்பர்கள் இருப்பது நலம்.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது முன்னதாகவே தெரியப்படுத்தப்படும். ஆனால் இந்த அப்ளிகேஷன் ஐஒஸ் பயன்படுத்தும் ஐபோன்களில் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.



பைட்பேக்: [FightBack]

இந்த அப்ளிகேஷன் இந்தியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இது எல்லா போன்களுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஜாவா வசதிகொண்ட போன்களிலும் பயன்படுத்த முடியும்.

இது GPS, SMS, லொகேசன் மேப்ஸ், GPRS, ஈமெயில் மற்றும் உங்கள் பேஸ்புக் கணக்கு ஆகியவற்றிலுள்ள பிடித்தமானவர்களுக்கு ஆபத்து நேரங்களில் தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்தும்.



SOS விசில்: [SOS Whistle]

இந்த அப்ளிகேசன் SOS மூலமாக குருஞ்ச்செய்திகளோ அல்லது நண்பர்களுக்கோ தெரியப்படுத்தாது. இதுவொரு சாதாரண செயல்பட்டைக்கொண்டது.

அதாவது நீங்களோ அல்லது உங்களைச்சார்ந்த பெண் ஒருவரோ ஆபத்தில் இருக்கும்பொழுது இந்த அப்ளிகேசன் விசில் போன்ற பலமான சப்தத்தை எழுப்பும். இதன்மூலம் அருகில் உள்ளவர்கள் உதவி செய்யலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget