ஆரம்ப கால இசை பயணத்தை பற்றி மனம் திறக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆரம்ப காலத்தில் இசை அமைக்க வந்தபோது தான் ஒரு அடிமையாக இருந்ததாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கிறார். சமூக வலைதளத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஆரம்பகாலத்தில் தன்னிடம் கொடுக்கப்பட்ட இசை குறிப்புகளை வைத்து, இசையமைத்து தனது திறமையைக் காட்ட வேண்டி இருந்தது என்றும், அப்போது தான் ஒரு அடிமை போல இருந்ததாக கூறியுள்ளார். மேலும் 20 ஆண்டுக்கு முன்பே இணையதளத்தின் முக்கியத்துவம் குறித்து
சேகர் கபூர் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் அப்போது இன்டர்நெட் என்பதற்கான ஸ்பெல்லிங் கூட தமக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார். இவர் இசையமைத்த பிரஞ்ச் பாடலைக் கேட்ட வெளிநாட்டவர், அந்த பாடல் பாரிசில் இசையமைக்கப்பட்டதாக கருதி பாராட்டினர். ஆனால் அந்த பாடல், சென்னையில் உள்ள ரகுமானின் இசைப் பள்ளியில் இசையமைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget