தன்னுடன் நடிககும் நடிகர்-நடிகைகளின் நடிப்பை சாதாரணமாக புகழ்ந்து பேசுவது ஒரு ரகம். ஆனால் பக்கம் பக்கமாக, வண்டி வண்டியாக புகழ்வதெல்லாம் ரொம்ப ஓவர்தான். அதைத்தான் தற்போது செய்து வருகிறார் நம்ம மண்ணின் மைந்தன் சசிகுமார். இதுவரை தன்னுடன் எத்தனை நடிகைகள் நடித்தபோதிலும், சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த லட்சுமிமேனனின் நடிப்பை அவர் வர்ணிப்பதைப்பார்த்து அருகில் இருப்பவர்களே அசந்து போகிறார்கள். அந்த அளவுக்கு சாதாரணமான பொண்ணு இல்ல
அது, நிமிசத்துக்கு நிமிசம் முகத்தை மாத்திக்கிட்டே இருக்கும். அப்படியொரு அற்புதமான நடிகை என்கிறார்.
ஆனால் இவர் இப்படி பில்டப் கொடுத்த போதும் சுந்தரபாண்டியனுக்குப்பிறகு லட்சுமிமேனனை யாருமே கோடம்பாக்கத்தில் சீண்டவில்லை. இதெல்லாம் வெறும் நாட்டு சரக்கு. பட்ஜெட் நடிகை என்று முத்திரை குத்தி விட்டனர். இருப்பினும் திறமையான நடிகையின் எதிர்காலத்தை யாரும் தடுத்து விட முடியாது என்று சொல்லி மீண்டும் தனது குட்டிப்புலி படத்தில் லட்சுமிமேனனுக்கு ஒரு சவாலான வேடத்தை கொடுத்திருக்கிறார் சசிகுமார். இந்த படத்தில் அவரது நடிப்புக்காக பல விருதுகள் தவம் கிடக்கும் என்று இப்போது இன்னும் பிரமாண்டமாக புகழ்ந்து, மேற்படி நடிகையை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் சசி.