எனக்கு 7 மொழிகள் பேசத் தெரியும்; அதுதான் என்னுடைய பெரிய பலம் என்று நடிகை அசின் பெருமைப்பட கூறியுள்ளார். நடிகைகளில் அதிக மொழிகள்பேச தெரிந்தவர் அசின். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திப்படங்களில் நடித்துள்ள அவர் படப்பிடிப்புகளில் அந்தந்த மொழிகளை உதவியாளர்கள் மூலமும் ஆசிரியர்கள் வைத்தும் கற்றுக் கொண்டு உள்ளார். அந்தந்த மொழி பட விழாக்களில் சரளமாக பேசியும் அசத்துகிறார்.
இதுகுறித்து அசின் அளித்துள்ள பேட்டியில், எனக்கு 7 மொழிகள் தெரியும். அதுதான் என்னுடைய பெரிய பலம். மலையாளம் எனக்கு தாய் மொழி. தமிழ், தெலுங்கு, படங்களில் நடித்த போது இருமொழிகளையும் கற்றேன். இந்திப்படங்களில் நடித்த பிறகு இந்தியையும் கற்றுக் கொண்டேன். இவை தவிர ஆங்கிலம், மராத்தி, பெங்காலி மொழிகளும் நன்றாக தெரியும். படப்பிடிப்புக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும்போது என்னை சூழ்ந்து கொள்ளும் ரசிகர்களிடம் அவர்களின் மொழிகளிலேயே பேசுகிறேன், என்று கூறியுள்ளார்.