நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரி; கடவுள்தான் எனக்கு துணையாக இருக்கிறார், என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். த்ரிஷா தற்போது தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். விஷால் ஜோடியாக நடித்த சமர் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. ஜெயம் ரவி ஜோடியாக பூலோகம் படத்திலும், ஜீவா ஜோடியாக என்றென்றும் புன்னகை படத்திலும் நடித்து வருகிறார். 2002-ல் சினிமாவுக்கு வந்த த்ரிஷா, கடந்த 10 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இத்தனை வருடங்கள் நடிகைகள் கதாநாயகியாக நிலைத்து இருப்பது பற்றி த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், வெற்றி என்பது சுலபமாக வராது. கஷ்டப்பட்டுதான் அதைப் பெறவேண்டும். சினிமாவில் அறிமுகமானபோது எனக்கு ஜெயிக்க முடியுமா என்ற பயம் இருந்தது. அப்படி பயந்தால் முன்னேற முடியாது. பயத்தை விட வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறேன். இவ்வளவு காலம் சினிமாவில் நீடிப்பதற்கு என் உழைப்பும், அதிர்ஷ்டமுமே காரணம். கடவுளும் எனக்கு துணையாக இருக்கிறார், என்றார்.