சினிமா நடிகர்கள் ஆடும் கிரிக்கெட்டை. நட்சத்திர கிரிக்கெட் என்பார்கள். சிசிஎல் என்றும் சொல்வார்கள். அதாவது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக். இதில் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னட நடிகர்கள் தனிதனி அணியாக விளையாடுவார்கள். அதை டி.வியில் ஒளிபரப்பி காசை அள்ளுவார்கள். இந்த கிரிக்கெட் போட்டிக்கு காஜல் அகர்வாலை தூதராக அறிவித்திருக்கிறார்கள். "இந்தியாவில் உள்ள எல்லா நடிகர்களுடனும் பழகும் வாய்ப்பு கிடைக்கும். எந்த அணிக்கும் சாதகமாக நடந்து கொள்ள மாட்டேன்.
எல்லா அணியினரையும் ஊக்கப்படுத்துவேன். விளையாட்டு மைதானத்துக்கு கவர்ச்சியாக உடை அணிந்து வரமாட்டேன்" என்று ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார் காஜல்.
லட்சுமிராய்கிட்ட டிப்ஸ் கேட்டுகுங்க காஜல்...!!