ரசிகர்களை கதற வைத்த மொக்கைப் படங்கள்


ரசிகர்களை கதற வைத்த பல கொடூர மொக்கைப் படங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம். திரையரங்கிற்கு வரும் அனைத்து படங்களும் வெற்றி பெறுவதில்லை. அதிலும் சில படங்கள் ரசிகர்களை தியேட்டரை விட்டே ஓட வைத்துவிடும் அளவு மொக்கையாக இருக்கும். அத்தகையை மொக்கை படங்களில் சிலவற்றை பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டாரின் பாபா, குசேலன் ஆகிய படங்கள் வந்தபோது ஆசையாக தியேட்டருக்கு போனவர்கள் மொக்கை தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்டனர்.

வித்தியாசமா ஏதாவது ட்ரை பண்ணும் கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு ஆகிய படங்கள் அவர் லெவலுக்கு இல்லை. மாறாக கமல் படம் என்னப்பா இவ்வளவு மொக்கையா இருக்கு என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

விஜய் எத்தனையோ அருமையான படங்களில் நடித்திருந்தாலும் அவரது சுறா, வில்லு படங்களை பார்த்த அவரது ரசிகர்களாலேயே கோபத்தை அடக்க முடியவில்லை. அவ்வளவு மொக்கை. விஜயால் மட்டும் எப்படி இது போன்ற படங்களில் நடிக்க முடிகிறது என்று அலுத்துக் கொண்டனர்.

அஜீத் குமார் தனது ஆழ்வார் மற்றும் அண்மையில் வெளியான பில்லா 2 ஆகிய படங்களின் மூலம் மொக்கை ரேசில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பிடித்துள்ளார். என்ன 'தல' பில்லா 2ல் பல இடத்தில் லாஜிக்கே இல்லாம இப்படி மொக்க போட்டிருக்கீங்களே என்று பலர் கூறினர்.

சீயான் விக்ரம் நடித்த படங்களில் ராஜபாட்டை, கந்தசாமி ஆகியவை கொடூர மொக்கைப் படங்கள். ரசிகர்களால் அதை ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை. ராஜபாட்டை படத்தை எடுத்ததற்காக இயக்குனர் சுசீந்திரன் மன்னிப்பே கேட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget