எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை படத்தில் அறிமுகமானவர் பூனம் கவுர். நல்ல அழகும், திறமையும் இருந்தும் அவருக்கு ஏனோ வாய்ப்புகள் அமையவில்லை. சில காலம் தெலுங்கு பக்கம் ஒதுங்கியவர் இப்போது மீண்டும் தமிழில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஷாம் நடிக்கும் 6, சிம்புவின் வேட்டை மன்னன், வதம், கெஸ்ட் என கையில் 4 படங்கள் வைத்திருக்கிறார். இதில் 6 படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். சமீபத்தில் 6 படத்தின் புரமோஷனுக்காக வந்திருந்தவரிடம் தமிழை விட்டு ஏன் சென்றீர்கள்
என்று கேட்டபோது "தமிழ் படத்தில் எனக்கு சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. அதனால்தான் தெலுங்கு பக்கம் போய்விட்டேன். ஆனால் இப்போது சினிமா புரிந்து விட்டது. ஒரு அனுபவத்தை வைத்து ஒட்டுமொத்த சினிமாவையும் எடைபோடக்கூடாது என்பதை உணர்ந்து விட்டேன். அதனால் தீவிரமாக தமிழில் நடிக்கிறேன். இனி தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.
அந்த கசப்பு அனுபவத்தை சொல்ல மாட்டீங்களா... பூனம்.