காதல் படத்தில் அறிமுகமானவர் சந்தியா. கேரளத்து நடிகையான இவரை பெரிய நடிகையாக்க வேண்டும் என்பதற்காக அவரது தந்தை வங்கி வேலையையே விட்டு விட்டு சந்தியாவுக்காக கம்பெனி கம்பெனியாக அலைந்தார். என்றபோதும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்குப்பிறகு தமிழில் சந்தியாவுக்கு சரியான படவாய்ப்புகள் இல்லை. அதனால் சென்னையிலுள்ள வீட்டையும் காலி பண்ணிவிட்டு கேரளாவுக்கே சென்று குடியேறி விட்டார்.
அங்கு முன்னணி நடிகை ஆகவில்லை என்றாலும் சில படங்களில் வித்தியாசமான கேரகடர்களில் நடித்து மார்க்கெட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில், தனது வருமானத்தை பெருக்கும் முயற்சியாக கேரளாவில் பல இடங்களில் பியூட்டி பார்லர்களை திறந்து விட்டுள்ளார் சந்தியா. அதற்காக ஏராளமான இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அதோடு சினிமாக்காரர்களுக்கென்று பிரத்யேகமான பியூட்டி பார்லரும் முக்கிய சென்டர்களில் திறந்துள்ள சந்தியா, அதை பராமரிக்க தனது தாய்குலத்தையே நியமித்திருக்கிறார். கண்டகண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் முடிந்தவரை இயற்கை குணாதிசயங்கள் கொண்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்தியே சந்தியாவின் பார்லர்கள் செயல்படுவதால் நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுகிறதாம். பொதுமக்கள் மட்டுமினறி சினிமா நட்சத்திரங்களும் விசிட் அடிக்கிறார்களாம். இதனால் சினிமாவை விட தற்போது பார்லர் தொழிலில்தான் அதிக வருமானம் ஈட்டி வருகிறாராம் சந்தியா.