சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் போடா போடி. இந்த படத்தின் மீது அவர் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டம் வழக்கம்போல் இப்படமும் அவரை ஏமாற்றி விட்டது. சில நாட்களிலேயே பல தியேட்டர்களிருந்து படம் தூக்கப்பட்டதால் மனதளவில் நொந்து போனார் நடிகர். இருப்பினும் அடுத்தபடியாக வாலு படம் வந்து தனது நம்பிக்கைக்கு உயிர் கொடுக்கும் என்று அப்பட வேலைகளில் தற்போது தீவிரமடைந்திருக்கிறார்.
இந்தநிலையில், போடா போடி படத்தைப்பார்த்த சிம்புவின் திரையுலக நண்பர்கள் சிலர், அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த வரலட்சுமியின் நடிப்பை பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளுகிறர்களாம். முதல் படத்தில் நடித்தது மாதிரியே தெரியவில்லை. பல படங்களில் நடித்த அனுபவமிக்க நடிகை போல் நடித்திருக்கிறார் என்கிறார்களாம். அதில் சிலர், சில காட்சிகளில் நடிப்பில் உங்களையும் வரலட்சுமி மிஞ்சி விட்டார் என்றும் சொல்கிறார்களாம். இதனால் நான் வருங்கால சூப்பர் ஸ்டார் நடிகன். என்னைப்போய் அந்த புதுவரவு நடிகையிடன் ஒப்பிட்டு அசிஙக்ப்படுத்தி விட்டீர்களே என்று நண்பர்களிடம் டென்சன் காட்டி வருகிறாராம் சிம்பு.