1969ல் ஆரம்பிக்கிறது கதை. கிட்டத்தட்ட ஆட்டோ பயோக்ரபி மாதிரி ஒரு இளைஞனுடைய கதையை ரியலிஸ்டிக்காக காண்பித்திருக்கிறார்கள். போதைப் பொருள் கடத்துவது ஒன்றும் சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும், இங்கே கடத்துபவனுடைய எழுச்சியும் வீழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது தான் சிறப்பு. Frank Lucas, 23 வயதுடைய இளைஞன், தரமான ஹெராயின் எங்கே கிடைக்கிறது என்று கண்டறிந்து தானே நேராக அங்கே சென்று அதை வாங்கி அமெரிக்காவில்
உள்ள நியூஜெர்சி வீதிகளில் மிகக் குறைந்த விலைக்கு விற்கிறார். வியட்நாமில் ஹெராயின் பயிறிடும் இடத்தில் Frankக்கும் ஹெராயின் விற்பவருக்கும் இடையே நடக்கும் பேச்சு, போதைப்பொருள் வாங்குபவனும் விற்ப்பவனும் எப்படி எதிராளி சரியான நபர்தான என்று எடைபோடுகிறார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். வியாபாரி, Frank உடைய பாஸ்போர்ட்ஐ வாங்கி பார்த்து விட்டு பேச்சை ஆரம்பிப்பார்….
Heroin Dealer: How did you get in to states?
Frank: You no need to worry about that..
HD: Whom do you work for there?
Frank: You no need to worry about that..
HD: Who you really?
Frank: Frank Lucas, as represent in passport
HD: I mean whom you represent?
Frank: Me
HD: you think you are going to take 100 kilos of heroin to US and you don’t work for anyone and someone is going to allow that
Frank: thats right
இப்படிப் போகும் உரையாடல்…..
வியட்நாமிற்கும் அமெரிக்கவிற்கும் இடையே நடந்துள்ள போரை கதையின் முக்கிய களமாக பயன்படுத்திஉள்ளனர். அங்கிருந்து வாங்கிய ஹெராயின் பவுடர்களை, போரில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் சடலங்களை ஏற்ற வரும் விமானத்தின் மூலம் யாருக்கும் சந்தேகம் வராத முறையில் கடத்தி, அமெரிக்கா வந்தடைந்தவுடன், விமான நிலையத்தில் கழிவுகளை அகற்ற வரும் container மூலம் அதை தன்னுடைய இருப்பிடத்திற்கு கொண்டுவருவார். பின்னர் பவுடர்களை சின்ன சின்ன பாக்கெட்டில் போட்டு Blue Magic என்று பெயரிட்டு சந்தைபடுத்தப்படும். தனி ஒரு நபராக எல்லா வேலைகளையும் செய்வதால் போலீசில் இவருடைய புகைப்படம் கூட இருக்காது. இந்த ஹெராயின் எங்கிருந்து வருகிறது யார் விற்கிறார்கள் என்று கண்டறியும் பொறுப்பு டிடெக்டிவ் Richie Robertயிடம் வருகிறது. 50க்கும் மேலான போதைப்பொருள் விற்ப்பவர்களின் புகைப்படங்களை வைத்து விசாரணையை தொடங்கும் Richie, பின்னர் இந்த படத்தில் இல்லாத யாரோ ஒருவன் தான் இதற்க்கு பின் புலமாக இயங்கிக்கொண்டிருக்கிறான் என்று சந்தேகக்கண்கொண்டு கடைசியாக Frankஐ கண்டுபிடிப்பார். Frank உடைய காதலி, குடும்பம் மற்றும் Richie Robert உடைய மனைவி குழந்தை என்று கதை அவ்வப்போது அவர்களையும் சுற்றுவதால் ஏதோ படம் பார்க்கிறோம் என்கின்ற உணர்வையும் மீறி நம்மை சுற்றி நடக்கின்ற ஒரு சம்பவத்தை கவனிப்பது போல தோன்றுகிறது.