விஸ்வரூபம் வெளியாகப் போகும் குஷியில் இருக்கிறார், ஆண்ட்ரியா. கோலிவுட்டை தாண்டி, முதல் முறையாக, மலையாளப் பக்கமும் கால் பதித்துள்ள அவர், ராஜிவ் என்பவர் இயக்கி வரும், ஒரு படத்தில் நடித்து வருகிறார். மலையாள திரையுலக அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "மலையாளம் எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனாலும், இயக்குனர் கற்றுக் கொடுத்ததை வைத்து, ஓரளவு சமாளித்து விட்டேன். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எனக்கு ஒருபோதும் இல்லை.
வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில், புதுமையாக யோசிக்கும் படக் குழுவினருடன் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை என, கூறியுள்ளார், ஆண்ட்ரியா.