அதிநவீன தொழில் நுட்பங்களுடன் பிரிண்டர் வாங்குவது எப்படி

பிரிண்டர் தற்போதுள்ள சூழ்நிலைகளில் மிகவும் சாதாரணமாகிவிட்டது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட சிறப்பம்சங்கள் உடைய பிரிண்டர்கள் கூட மலிவுவிலையில் கிடைக்கிறது. பிரிண்டர் அளவு நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது. மேலும் இதன் செயல்திறன் பன்மடங்கு வளர்ந்துள்ளதை நவீனம் சொல்கிறது. பயன்படுத்துவதும் மிக மிக எளிதானது.
நம்மில் பெரும்பாலானோர் பிரிண்டர் சாதனத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவோம். எனவே இந்த பிரிண்டர் சாதனங்களை பற்றிய தெளிவான பதிவை இங்கே வெளியிடுகிறோம். சாதன சந்தையில் கிடைக்கும் சில சிறந்த பிரிண்டர்கள் பற்றிய தகவல்கள் மட்டும் இங்கே பகிரப்பட்டுள்ளது.

கானன் பிக்ஸ்மா எம்ஜி6250 : கானன் என்ற சாதனா தயாரிப்பு நிறுவனத்தைப்பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்நிறுவனம் பிரிண்டர் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளது. இதன் புதிய தயாரிப்பு பிக்ஸ்மா எம்ஜி6250யாகும்.
 
இது புகைப்படங்கள் மற்றும் சாதாரண தகவல்களை பிரிண்ட் செய்யக்கூடியது. மேலும் CDக்களில் உள்ள தகவல்களையும் நேரடியாக அச்சிடக்கூடியது. இதுவொரு இணைப்பில்லாமல் பயன்படுத்தும் சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது.

லெமொண்ட் எவோஜெட் ஆபீஸ் : தற்போதுள்ள பிரிண்டர் தொழில்நுட்பத்தில் இதுதான் அதிநவீனமானதாகும். ஆனால் இதன் வடிவமைப்பு சற்று பழைய வடிவில்தான் இருக்கும்.
 
சாதாரண மற்றும் அசையாத மேல்பகுதியை கொண்டது. இதில் 70,000 நாசில்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் 60ppm என்ற முறையிலும் அச்சிடமுடியும். கலர் அச்சிடும்பொழுது இதன் வேகம் மிக அதிகமாக இருக்கும். வேகமாக இருந்தாலும் இதன் தரம் குறையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இந்திய விலை சுமார் ரூ.35,000.

ஹெச்பி போட்டோ ஸ்மார்ட் 5510 : இது ஹெச்பி நிறுவனத்தின் புதிய தயாரிப்பு. இந்த ஹெச்பி போட்டோ ஸ்மார்ட் 5510 எல்லா வசதிகளையும் தன்னகத்தே கொண்டது. மேலும் இதன் விலை மிகவும் குறைவே.
 
முன்னர் இதன் விலை ரூ.2,500 ஆக இருந்தது. இதன் அதிக விற்பனை காரணமாக விலை ஏற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் தொடுதிரை மற்றும் ஸ்கேனர் ஆகிய சிறப்பங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கானன் பிக்ஸ்மா எம்எக்ஸ்895 : அலுவலகங்களில் பயன்படுத்தும் பிரிண்டர்கள் பெரும்பாலும் படங்களை பிரிண்ட் செய்யும்வகையில் இருக்காது. ஆனால் இந்த கானன் பிக்ஸ்மா எம்எக்ஸ்895 ஒரு அலுவலக பிரிண்டர் தான் இருந்தாலும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
 
இதில் ஈதர்நெட் மற்றும் WiFi இணைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. இதில் மூன்று திரைகள் இருப்பது சிறப்பம்சமாகும்.

ஹெச்பி ஆபீஸ்ஜெட் ப்ரோ 8600 பிளஸ்: இந்த பிரிண்டர் பார்ப்பதற்கு சாதாரண பிரிண்டர்களை விடவும் அழகானது. அதேபோல் இதன் தரமும் சிறப்பானது. இதில் ஸ்கேனர் உள்ளது. இதில் அச்சிடுவது மற்றும் ஸ்கேன் செய்வது ஆகிய இரு செயல்களும் மிகவும் எளிமையானதே.
 
இது எழுத்துக்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை தெளிவாக அச்சிடும் தன்மைகொண்டது. விலை குறைந்ததும் கூட.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget