body of lies சினிமா விமர்சனம்


Roger Ferris’உம் (Leonardo DiCaprio) Ed Hoffman’உம் (Russell Crowe) CIA உளவாளிகள் என்றாலும் இருவருக்கும் இடையே மடுவுக்கும் மலைக்கும் இடையிலான ஒற்றுமை — களமுனையில் நின்று, உயிரை பணயம் வைத்து ஒற்றறியும் வேலை Roger’இனது; Bluetooth தொலைபேசியுடனும், செய்மதி படங்களினுடம் அமெரிக்க சொகுசுடன் இருந்து Roger போன்ற களமுனை ஒற்றர்களிற்கு ஆணையிடும் வேலை Ed’இனது. இவர்கள் இருவரும் Al Saleem எனப்படும் இஸ்லாமிய பயங்கரவாதியொருவனை
வேட்டையிடுவது படத்தின் பொதுவான கதை. படம் Roger Iraq’இல் Al Saleem பற்றிய தகவல் திரட்டுவதோடு ஆரம்பிக்கின்றது. சிலரை காவு கொடுத்தபின் Al Saleem’இன் பயங்கரவாத மையம் ஒன்று Jordan’இல் இருப்பதை அறிகின்றான் Roger. எனவே இவனை Jordan’இல் இருக்கும் CIA செயலகத்திற்கு பொறுப்பாளராக பதவியேற்றம் செய்து அனுப்பிவைக்கின்றார் Ed. அங்கு Jordan உளவுத்துறை இயக்குணர் Hani Salaam’உடன் இணைந்து செயற்படவேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து கொள்கின்றார் Roger. Roger’இன் களமுனை அனுபவங்கள் Jordan நாட்டு அதிகாரிகளை அணுகவேண்டிய முறையினை கற்பித்துக்கொடுக்க, Roger’இன் புதிய அணுகுமுறை Hani Salaam’ற்கு பிடித்துக்கொள்கின்றது. இவர்கள் இருவரின் ஒருங்கிய இணைப்பு பலன் கொடுக்கும் வேளையில், Ed’இன் குறுகிய நோக்கினால் வரும் தலையீடு அனைத்தையும் பாழடித்துவிடுகின்றது. இதனால் மிகவும் ஆத்திரம் அடையும் Hani Salaam, Roger’ஐ அதற்காக குற்றம் சாட்டி Jordan நாட்டிலிருந்து துரத்திவிடுகின்றார்.

Ed’உடன் மிகவும் ஆத்திரத்தில் இருந்த்தாலும், Al Saleem’ஐ கண்டுபிடிக்கவேண்டிய தேவையிருப்பதால் மீண்டும் Ed’உடன் இணைந்து செயற்படுகின்றான் Roger. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா தனது முழு தகவல் தொழில்நுட்பத்தையும் செலவு செய்தாலும், Al Saleem’ஐப் பற்றிய எவ்வித தகவல்களும் சேகரிக்க முடியவில்லை. ஏனெனில், Al Saleem சகலவிதமான இலத்திரனியல் தொலைபாடல் முறைகளிலிருந்தும் வேண்டும் என்றே விலகியிருப்பது. இந்தநிலையில் Roger ஒரு புதிய ஒரு உபாயத்தை முன்வைக்கின்றான்: Al Saleem’ஐ CIA தேடுவதை விடுத்து, CIA’ஐ Al Saleem தேடவைப்பது. அதற்கு ஒரு பொய்யான ஒரு புதிய ஒரு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தை ஆரம்பிக்கின்றார்கள். அதற்கு ஒரு உண்மையான ஒரு இஸ்லாமியத் தலைவன் — அவனிற்கே தெரியாமல்! இந்த “body of lies” எவ்வாறான முடிவில் கொண்டு சென்று சேர்க்கின்றது என்பது மிகுதிக்கதை — அதுதான் விறுவிறுப்பான பாகமும் கூட.

படம் சற்றே இரண்டு தோணியில் கால்வைத்தது போல் இருக்கின்றது: ஒரு விறுவிறுப்பான espionage (ஒற்றறிவு?) த்திரில்லரை எடுப்பது ஒரு நோக்கம்; அமெரிக்காவில இருந்துகொண்டு களமுனை அறிவின்றி திட்டமிடும் அதிகாரிகளை வைவது அடுத்த நோக்கம். இரண்டும் தாமரை இலைத் தண்ணீர்த்துளிபோல ஒட்டாமல் நிற்கின்றது. த்திரில்லர் என்ற வகையில் படம் நன்றாகவே போகின்றது — இயக்குணர் Ridley Scott’க்கு (Gladiator இயக்குணர்) அது பெரிய வேலையேயில்லை. செய்மதிகளின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு (literally) ஆளைக் கடத்து காட்சி அந்தமாதிரி. சொகுசான அதிகாரியாரியாக வரும் Russell Crowe கொடுக்கப் பட்ட பாத்திரத்தை திறன்பட செய்திருந்தாலும், அந்த பாத்திரம் கொஞ்சம் too much!! பிள்ளையின் பாடசாலை வாகன தரிப்பிடத்தில் இருந்துகொண்டு சர்வதேச பயங்கரவாதத்தை நெறியாக்கம் செய்வதாகக் காட்டியிருப்பது கொஞ்சம் over பாருங்கோ!! புத்தகத்திலிருந்து திரைக்கு வரும் கதைகளில் எப்பவுமே ஓட்டைகளைக் கண்டு பிடிக்கலாம் — இங்கும் அப்படியே. என்றாலு பார்க்கக் கூடிய படம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget