புத்தாண்டில் கோலிவுட்டில் ஜொலிக்க போகும் கடந்தாண்டு அறிமுகங்கள்

எந்த வருடமும் இல்லாத வகையில், கடந்த 2012-ல் ஏராளமான புதுமுகங்கள் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினர். நடிப்பு, இயக்கம், இசையமைப்பு, தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளிலும் தமிழ்த்திரையுலகில் புதுமுக வரவுகள் கடந்தாண்டு சற்றே அதிகம் என்றாலும், அதில் திரும்பி பார்க்க வைத்த சிலரை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
2012-ல் 79 கதாநாயகர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் உதயநிதி ஸ்டாலின் (ஒரு கல் ஒரு கண்ணாடி), விஜய் ஆண்டனி (நான்), விக்ரம் பிரபு (கும்கி) ஆகியோர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் (மெரினா,  மனம் கொத்தி பறவை), லகுபரன் (ராட்டினம்), தினேஷ் (அட்டக்கத்தி), ராஜேஷ் யாதவ் (புதுமுகங்கள் தேவை) ஆகியோர் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

2012-ல் 78 கதாநாயகிகள் அறிமுகமானார்கள். அவர்களில் லட்சுமி மேனன் (சுந்தர பாண்டியன், கும்கி), வரலெட்சுமி (போடா போடி),  ஸ்வாதி (ராட்டினம்), நந்திதா (அட்டக்கத்தி), மனீஷா யாதவ், ஊர்மிளா (வழக்கு எண் 18/9), காயத்ரி (18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்) ஆகியோர் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். 

2012-ல் 97 இயக்குனர்கள் தங்கள் முதல் படைப்பை தமிழ் திரையுலகிற்கு தந்திருக்கிறார்கள். அவர்களில் ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் (3), பாலாஜி மோகன் (காதலில் சொதப்புவது எப்படி), கார்த்திக் சுப்ராஜ் (பீட்சா), அன்பழகன் (சாட்டை), எஸ்.ஆர்.பிரபாகர் (சுந்தர பாண்டியன்), ரஞ்சித் (அட்டகத்தி), பாலாஜி பரணிதரன் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்), ஜீவா சங்கர் (நான்), ராஜமவுலி (நான் ஈ), சந்தோஷ் சிவன் (உருமி), கே.எஸ்.தங்கசாமி (ராட்டினம்), சத்யசிவா (கழுகு) உள்ளிட்டவர்கள் தங்களது படைப்பை பாராட்டும்படி தந்தார்கள். 

இசையமைப்பாளர்களை பொறுத்தமட்டில் 2012-ல் 70க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் அறிமுகாகி இருக்கிறார்கள். அவர்களில் அனிருத் (3), கிரிஷ் (மெரினா), கார்த்திக் (அரவான்), பிரசன்னா (வழக்கு எண் 18/9), மனுமோகன் (ராட்டினம்) உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

நம்பிக்கை வரவுகளான மேற்படி நாயகர்கள், நாயகிகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்களில் 2013-ல் தமிழ் திரையுலக வானில் யார் யார் பெரும் நட்சத்திரங்களாக ஜொலி ஜொலிப்பார்கள் என்பதை பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுவரை மேற்படி அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட் சொல்லுவோம்!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget