த ஹாபிட் ஹாலிவுட் விமர்சனம்

இங்கிலாந்தின் பிரபல நாவலாசிரியர் ஜே.ஆர்.ஆர்.டோல்கீன் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள படம் "த ஹாபிட் - அன்எக்ஸ்பெக்டட் ஜர்னி'. 1930 களில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல், அதையடுத்து காலனி நாடுகளை மறுபங்கீடு செய்ய ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொண்ட இரண்டாம் உலகப்போர் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தால் ஒரு கற்பனை உலகைப் படைக்க "த ஹாபிட்', "லார்ட் ஆஃப் த ரிங்ஸ்', "த சில்மாரிலியன்' போன்ற நாவல்களை அடுத்தடுத்து எழுதினார் டோல்கீன்.

இதில் "லார்ட் ஆஃப் த ரிங்ஸ்' திரைப்படமாக மூன்று பாகங்களாக வெளிவந்து உலகெங்கும் வசூலில் சாதனை படைத்தது. இதனால் டோல்கீனின் புகழ் உலகெங்கும் பிரபலமடைந்தாலும் அவருக்கு இதில் சங்கடம்தான். ஏனென்றால் "ஹாபிட்' நாவலைத்தான் தன்னுடைய மாஸ்டர் பீஸாக நினைத்தார். அவருடைய கனவு அவர் மறைந்த பிறகு இப்போது நனவாகியுள்ளது.
படத்தின் கதை இதுதான். நாயகன் பில்போ பேகின்ஸ் சகல வசதிகளுடன் வாழ்ந்து வந்தாலும் அவனுடைய மனதில் ஓர் இனம் புரியாத விரக்தி. அந்த நேரத்தில் கண்டல்ஃப் என்ற மந்திரவாதியை எதேச்சையாக சந்திக்கிறான். காட்டுக்கு அப்பால் தனித்திருக்கும் ஒரு மலையில் புதையல் இருப்பதாகவும் அதை ஒரு டிராகன் பாதுகாத்து வருவதாகவும் கூறும் மந்திரவாதி அந்த டிராகனைக் கொன்றுவிட்டு புதையலை அடைந்துவிடலாம் என்கிறான்.
விரக்தியில் இருக்கும் பில்போ அதற்கு சம்மதிக்கிறான். அதையடுத்து அந்த ஊரில் உள்ள குள்ளர் இனத்தவருடன் ஒரு சாகசமான பயணத்தை மேற்கொள்கிறான். செல்லும் வழியில் அபாயகரமான பாதை, கற்பனைக்கெட்டாத விந்தையான விலங்குகளின் தாக்குதல், உடன் இருப்பவர்களின் நயவஞ்சகம் போன்றவற்றையெல்லாம் எதிர்கொள்கிறான். அப்போது ஒரு விநோதமான மிருகத்திடம் இருந்து அபூர்வ சக்தி வாய்ந்த மோதிரம் ஒன்றை தந்திரமாக அபகரிக்கிறான். (இந்த மோதிரத்தின் பூர்வீகக் கதைதான் "த லார்ட் ஆஃப் த ரிங்ஸ்').
ஒரு வழியாக அந்த மலையை அடைந்து டிராகனையும் கொன்று புதையலைக் கைப்பற்றுகிறார்கள். இதற்குப் பிறகுதான் பிரச்னையே ஆரம்பமாகிறது. புதையலுக்காக உடன் சென்றவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் அவர்கள் வழியில் எதிர்கொண்ட எதிரிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு பெரும் படையைத் திரட்டிக்கொண்டு பில்போ குழுவினரைக் கொல்ல வருகிறார்கள். இந்த நேரத்தில் மந்திரவாதி, "நமக்குள் சண்டை வேண்டாம். நாம் ஒன்றுசேர்ந்து எதிரிகளை அழித்துவிட்டு பிறகு புதையலைப் பகிர்ந்துகொள்வோம்' என்கிறான். அதன்படி ஒற்றுமையுடன் போருக்குத் தயாராகும் பில்போ குழுவினர் எதிரிகளை அழிக்கிறார்கள்.
ஆனால் இந்த வெற்றி பில்போவுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கு பதில் சோகத்தையே ஏற்படுத்துகிறது. தனக்குரிய புதையல் பங்கைக் கூட வேண்டாம் என மறுத்துவிட்டு தனது பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறான். இப்போது அவன் மன நிம்மதியுடன் வாழத் தொடங்குகிறான்.
ஒரு பயணம் மனிதனை எப்படி பக்குவப்படுத்துகிறது என்பதுதான் பிரமாண்டமான திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. மார்ட்டின் ஃப்ரீமேன், இயான் மெக்கல்லன், இஜா வுட், கேட் பிளாங்கெட் உள்பட ஏராளமான பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். "த லார்ட் ஆஃப் த ரிங்ஸ்' படத்தின் மூன்று பாகங்களை இயக்கிய பீட்டர் ஜாக்ஸன்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
நியூ லைன் சினிமா, எம்.ஜி.எம்., வார்னர் பிரதர்ஸ் என ஹாலிவுட்டின் மூன்று மெகா தயாரிப்பு நிறுவனங்கள் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளன. ஒரு ஹாலிவுட் படத்தை மூன்று மிகப் பெரிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பது இதுவே முதல் முறை என்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதுவரை திரைப்படங்களில் விநாடிக்கு 24 ஃபிரேம்கள் என்பதுதான் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் முதல் முறையாக "த ஹாபிட் - அன் அன்எக்ஸ்பெக்டட் ஜர்னி' படம் 48 ஃபிரேம்களில் அதிலும் 3டி வடிவில் வெளியாகியுள்ளது.
படம், நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு பரவச அனுபவத்தை அளிக்கும் என நம்பலா
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget