கூந்தலின் வளர்ச்சியை எளிதாக பராமரிப்பது எப்படி?


கூந்தல் பற்றிய பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அந்த அளவு பிரச்சனைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக கூந்தல் உதிர்தல் யாருக்கெல்லாம் உள்ளது என்று கேட்டால், இல்லையென்று சொல்பவர்களை பார்க்கவே முடியாது. மேலும் சிலர் பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பர்.
அதற்கும் எத்தனையோ சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பார்கள். இருப்பினும் அதற்கான முடிவு இது தான் என்று கூற முடியாது. இந்த பிரச்சனையை தீர்க்க ஒரே வழியென்றால், அது முறையான பராமரிப்பு தான்.
இந்த பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு வந்தால், கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை அறவே தவிர்க்கலாம். அந்த மாதிரியான கூந்தல் பராமரிப்பிற்கு முக்கியமானது என்றால் அது இயற்கையான பொருட்களை வைத்து ஹேர் பேக்குகள் போடுவது தான். இப்போது அந்த ஹேர் பேக்குகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை கூந்தலுக்கு போட்டு, கூந்தல் வளர்ச்சியை அதிகமாக்குங்கள்.

வல்லாரை மற்றும் மருதாணி மாஸ்க் : வல்லாரை ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. அதிலும் இந்த மாஸ்க் நினைவு சக்தியை அதிகரிப்பதோடு, கூந்தலுக்கு மிகவும் ஆரோக்கியத்தையும் தரும். அதிலும் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்தல், முடியை கருமையாக வைப்பது மற்றும் கூந்தல் உதிர்தலை தடுத்தல் போன்றவற்றில் சிறந்ததாக உள்ளது. அதற்கு வல்லாரை பவுடரை, ஹென்னா பவுடருடன் சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, கூந்தலில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு, குளிக்க வேண்டும். முக்கியமாக, இந்த பேக் போடும் முன், தலைக்கு தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும்.

செம்பருத்தி பூ மாஸ்க் : இந்த மாஸ்க்கில் இரண்டு செம்பருத்தி பூவை, இரவில் படுக்கும் முன் ஒரு கப் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை அரைத்து, 1/4 கப் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாலுடன் சேர்த்து கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும் படியாக தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும்.

சூடான எண்ணெய் மசாஜ் : கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க எண்ணெய் மசாஜை விட சிறந்தது வேறு எதுவுமில்லை. எனவே கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமெனில், எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து குளிக்க வேண்டும். அதுவே பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, வாரதத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

ஹென்னா மாஸ்க் : ஹென்னா எனப்படும் மருதாணி கூந்தலை அடர்த்தியாகவும், நீளமாகவும், பட்டுப் போன்றும் வளரச் செய்யும். எனவே இந்த மருதாணியை மூலப்பொருளாக கொண்டு, அத்துடன், கறிவேப்பிலை, செம்பருத்தி இலைகள் மற்றும் வெந்தயம் சிறிது சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, சிறிது தயிர் ஊற்றி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 40-45 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில், ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

த்ரிப்லா மாஸ்க் (Triphala Mask) : இந்த மூலிகை ஹேர் மாஸ்க்கை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். அதற்கு த்ரிப்லா எனப்படும் நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் பூந்திக்கொட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட பொடியுடன், வல்லாரை மற்றும் துளசியை சேர்த்து அரைத்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget