மகனை வைத்து பாக்யராஜ் எடுப்பதாக இருந்த இன்று போய் நாளை வா ரிமேக்கை சைலண்டாக ராம.நாராயணனும், சந்தானமும் திருட்டு லட்டு செய்து பொங்கலுக்கு விநியோகித்திருக்கிறார்கள். கடைசி நேர காம்பரமைஸில் அரை கோடி திரைக்கதை மன்னனுக்கு காம்பன்சேஷன் தந்ததாக தகவல். பாக்யராஜின் எவர் கிரின் ஹிட் முந்தானை முடிச்சு படத்தை ரிமேக் செய்வது கடினம் என்று நினைத்தார்களோ என்னவோ.
இதன் இரண்டாம் பாகத்தை தற்போது மாப்பிள்ளை வினாயகர் என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். விஜய் டிவி யில் காமெடி நிகழ்ச்சி செய்து வந்த ஜீவா இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாகிறார். குருவி படத்தில் த்ரிஷாவின் பையை ஆட்டையைப் போட்டு அடி வாங்குவாரே... அவர்தான் ஜீவா.
பாண்டியராஜன், சந்தானம் இருவரும் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். டூ படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கம். காரைக்குடியில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.
கண்ணா திருட்டு லட்டு தின்ன ஆசையா போலில்லாமல் இந்த இரண்டாம் பாகம் முயற்சி பாக்யராஜின் அறிதலுடன் நடக்கிறது. ஜீவாவின் பெற்றோர்களாக முந்தனை முடிச்சு ஜோடியான பாக்யராஜும், ஊர்வசியும் நடிக்கிறார்கள்.
முருங்கைக்காய் ட்ரிட்மெண்ட் உண்டா?