1951ஆம் படத்தின் மீள்வடிவம். வெளி உலகில் இருந்து பூமிக்கு வருகை தருகின்றார் Klaatu மனிதர்களோடு தொடர்பாடல்களை ஏற்படுத்துவதற்காக, மனித உருவத்தோடு. கூடவே பாதுகாப்பிற்காக பிரமாண்டமான ஒரு இயந்திரமனிதனும். New Yorkல் வந்து இறங்கும் Klaatu, ஐ.நா. சபையோடு பேச வேண்டும் என்கின்றார். வழமைபோல மனித இனம் அதை ஒரு அச்சுறத்தாலாக எடுத்துக்கொள்கின்றது. Klaatuவிடம் இருந்து வேறுலகவாசிகளைப் பற்றி தகவல்களைக் கறக்கமுயலும் அமெரிக்க அரசு, மனித உருவில்
இருந்தாலும் Klaatu அமானுஷ்ய சக்தி கொண்டவர் என்பதை காலங்கடந்தபின் அறிந்து கொள்கின்றது. Klaatuஉடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்துக்கு நல்லது என்று நம்பும் டாக்டர் Helen, மற்றும் Helenஇன் மகனுஉடனுடம் சேர்ந்து பூமியில் தனது பயணத்தை தொடர்கின்றார் Klaatu. இவர்களின் பயணத்தின்போது, Klaatuஇன் வருகை உண்மையாகவே மனித இனத்தின் அழிவிற்காகத்தான் என அறிகின்றார் Helen. மனித இனம் பூமியை சாகடிக்கத்துக் கொண்டிருக்கின்றது; மனித இனம் சாகலாம், ஆனால் பூமியை சாகவிடமுடியாது என்பது Klaatuவின் வாதம். Klaatuவின் மனதை மாற்றி மனித இனத்திற்கு இன்னுமோர் வாய்ப்பை ஏற்படுத்த Helen முயல்வது மிகுதிக்கதை.
படம் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு படக்கென்று முறிந்துவிடுகின்றது. இருக்கும் சில ஆக்சன் காட்சிகள் கூட புதிதானதாக இல்லை. Sci-fi (விஞ்ஞான கற்பனை) என்றுசொல்வதற்கும் பெரிதாக ஒன்றும் இல்லை. 1951ஆம் ஆண்டுப்படத்தில் பூமியை அணு ஆயுத ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக Klaatu வருகின்றார்; புதிய படத்தில் பூமியை சூழல் (environmental) அழிவில் இருந்து காப்பாற்ற முனைகின்றார் Klaatu. மனித இனத்தில் வேரோடியிருக்கும் அன்பு, பாசம் என்பவற்றை பார்த்து Klaatu மனம் மாறுவது 1951ஆம் ஆண்டு படத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கலாம்; ஆனால் அது புதிய படத்திற்கு ஒட்டவேயில்லை.
படத்தின் ஒரேயொரு வெற்றி, உணர்ச்சி ஏதும் அற்ற வேற்றுலக மனிதனாக நடிப்பதற்கு Keanu Reevesஐ (Matrix பட நாயகன்) தெரிந்தெடுத்திருப்பது — நன்றாக ஒத்துப் போகின்றது. படத்தில் அடுத்த நடிப்பு Helen’இன் மகனாக வரும் Will Simithஇன் உண்மை மகன் Jaden Smith. அப்பாவின் பெயரை நிச்சயமாகக் காப்பாற்றுவார்போல இருக்கின்றது.