ஒரு வியட்நாம் போரை மையாமாக வைத்து ஒரு ஆக்சன் படம் எடுக்க முனைகின்றார் ஒரு இயக்குணர். நடிகர்களாக வந்து வாய்ப்பது பிரபல்யங்களாக இருந்தாலும் பலவேறுவழியில் சீரழிந்து போன ஒரு கூட்டம். இவர்களை இயக்கமுனைந்து வாழ்க்கை நொந்து போக, செலவழியும் ஒவ்வொரு நாட்களும் விழுங்குகின்ற பணத்திற்காக மறுபக்கத்தில் தயாரிப்பாளர் தொண்டையைப் பிடிக்க, ஒரு தீவிரமான முடிவுக்கு வருகின்றார் இயக்குணர் — பொய்யாக செட்டுகளை பாவிக்காமல் உண்மையான காட்டுக்குளேயேபோய் படம் எடுப்பதுதான்
சரியென்று நடிகர் குழாமை காட்டுக்குளே கொண்டுபோய் இறக்கிவிடுகின்றார் இயக்குணர். இறங்கியபின்புதான் தெரியவருகின்றது, அது உண்மையாகவே ஒரு பயங்கரவாதிகளில் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஒரு காட்டுப் பிராந்தியம் என்று. இந்தச் சிக்கலுக்குள் இருந்து மீண்டுவர இவர்கள் அடிக்கும் கூத்துத்தான் படம்.
புத்திசாலித்தனமான கதைவசன்ங்கள் மாத்திரமன்றி, புத்திசாலித்தனமான கதாபாத்திரங்களும் கூட: Ironman பட நாயகர் Robert Downey Jr. கறுப்பனாக வேடமேற்கும் வெள்ளை நடிகராக வருகின்றார். அதற்காக அவர் கறுபனாக பாவனை செய்யமுனைவது படத்தின் நகைச்சுவையின் உச்சக்கட்டம். Jack Black, Ben Stiller என்று ஒரு பெரிய நகைச்சுவைக் கூட்டமே உள்ளது. படத்தில கணிசமான ஒரு பாகத்தில் வரும் Tom Cruiseஐ யாரும் அடையாளம் கண்டால் சொல்லவும்!!
நகைச்சுவை ரசிகர்கள் கட்டாயாம் பார்க்கவேண்டும். மற்றவர்களும் நம்பிப்பார்க்கலாம். சாதாரண நகைச்சுவை படங்களில் இருந்து சற்றே மாறுபட்டு எடுத்திருக்கின்றார்கள்.