தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள், காமெடியன்களுடன் ஜோடி சேர்ந்தாலோ அல்லது குத்துப்பாட்டுக்கு ஆடினாலே அடுத்தகணமே அவர்களது மார்க்கெட் அவுட்டாகி விடும். அதற்கு உதாரணமாக, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியதால், திரும்பிப்பார்ப்பதற்குள் அவரது மார்க்கெட் காணாமல் போனது. அதேபோல், கருணாஸ்
உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்ட கார்த்திகா உள்ளிட்ட சில நடிகைகளும் அதன்பிறகு படமே இல்லாமல் சொந்த ஊருக்கே ரயிலேறி விட்டார்கள்.
அதனால் விவரமான நடிகைகள் யாருமே இப்போது காமெடியன்களுடன் நடிக்க வேண்டும் என்றாலே, கால்சீட் இல்லை என்று கழண்டு கொள்கிறார்கள். ஆனால் லட்சுமிராயைப்பொறுத்தவரை வகையாக சிக்கிக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது அவர் நடித்துள்ள ஒன்பதுல குரு படத்தில் வினய்யுடன் டூயட் பாடினாலும், படத்தின் வியாபாரத்தை கருத்தில் கொண்டு இப்போது பவர்ஸ்டாரையும் ஒரு பாட்டுக்கு ஆட வைத்திருக்கிறார் இயககுனர் செல்வகுமார். அதோடு, அவருடன் லட்சுமிராயும் ஆடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கட்டாயப்படுத்தி குத்தாட்டம் போட வைத்து விட்டாராம். அந்த செய்தி வெளியான பிறகுதான் இப்படி லட்சுமிராய்க்கு போன் போட்டு பயமுறுத்துகிறார்களாம் கோலிவுட் நடிகைகள். இதனால், வறுதத மீனுக்கு ஆசைப்பட்டு எண்ணெய் சட்டிக்குள் கையை விட்டு விட்டேனே என்று தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறார் லட்சுமிராய்.