ஹரிதாஸ் சினிமா விமர்சனம்


நடிகர் கிஷோர் கதையின் நாயகனாவும், சினேஹா கதையின் நாயகியாகவும் நடித்துள்ளனர். சின்ன குழந்தைகளுக்கு அவர்களது தந்தை தான் முதல் ஹீரோ. இப்படத்திலும் ஹரிக்கு ஹீரோவாக அவனது தந்தை தாஸ் இருக்கிறார். இவர்களது இருவரது பெயரும் சேர்ந்தது தான் “ஹரிதாஸ்” சரி படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.


சென்னையை கலக்கும் ஐந்து ரவுடிகளை என்கௌன்டரில் போட்டு தள்ள அமைக்கப் பட்டிருக்கும் போலீஸ் டீமின் தலைமை அதிகாரியாக சிவதாஸ் (கிஷோர்). நான்கு என்கௌன்டரை வெற்றிகரமாக முடித்து கடைசி நபரும் ரவுடிகளின் தலைவனுமான ஆதியை (பிரதீப் ராவுத்) சுட்டு தள்ள ஆயுதமாகிறார். இதை தெரிந்துகொண்ட வில்லன் ஆதி தலைமறைவாகிறார். அந்த சமயத்தில் தனது தாய் இறந்துவிட்டதாக ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது சிவதாசிற்க்கு (கிஷோர்). தனது மனைவி இறந்த பின் ஆடிசம் குறைபாடுள்ள ஒரே மகன் ஹரியை (பிரிதிவிராஜ்) தாயின் பராமரிப்பில் விட்டிருந்த கிஷோருக்கு இந்த செய்தி பெரிய இடியாக வருகிறது. ஊருக்கு சென்று தாயின் ஈம சடங்குகளை முடித்த கையோடு மகன் ஹரியை சென்னைக்கு கூட்டி வருகிறார் கிஷோர்.

ஆடிசம் குறைபாடு உள்ள ஹரியை வைத்துகொண்டு ரொம்ப கஷ்ட படுகிறார். தனது மகன் பக்கத்தில் எப்போதுமே இருக்கவேண்டிய கட்டாயத்தால் போலீஸ் வேலைக்கு சிலகாலம் விடுமுறை எடுக்கிறார் கிஷோர். ஹரியை ஓர் அரசு பள்ளியில் ஆசிரியை அமுதவள்ளியின் (சினேஹா) வகுப்பில் சேர்கிறார். ஆடிசம் குறைபாடு உள்ளதால் கூடுதல் அக்கரை எடுக்கிறார் சினேஹா, கிஷோர் தனது மகனுடனே பள்ளி வகுப்பறையில் இருக்கிறார்.அதே சமயத்தில் வில்லன் ஆதியை தேடி கண்டுபிடித்து சுட்டு தள்ள தனது டீமில் இருக்கும் நண்பனை நியமிக்குமாறு போலீஸ் கமிஷ்னரிடம் பரிந்துரைக்கிறார் கிஷோர். தலைமை ஏற்ற சில தினங்களில் கிஷோரின் நண்பன் காணாமல் போகிறார். ஒரு கட்டத்தில் தனது மகனிடம் இருக்கும் ஒரு திறைமையை கண்டுகொளும் கிஷோர் அதற்காக என்ன செய்கிறார், காணாமல் போன நண்பன் கதி என்ன, வில்லன் ஆதியை கிஷோர் சுட்டு கொன்றார இல்லையா என்பதை திரையில் பார்க்கவும்.

நாயகன் கிஷோர் நடிப்பில் சிக்ஸர் அடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக நடிப்பில் ஒரு மிடுக்கும், ஒரு தந்தையாக மகன் படும் கஷ்டத்தை கண்டு அழும் போதும் நம்மையும் நெகிழ வைக்கிறார். கிஷொரின் மகனாக மாஸ்டர் பிரிதிவிராஜ் நடித்துள்ளார். ஆடிசம் குறைபாடு உள்ள ஒரு குழந்தை எப்படி நடிக்க வேண்டுமோ அப்படியே நடித்துள்ளார். நடிப்பில் கிஷோருக்கு போட்டியே பிரித்விதான். பள்ளி ஆசிரியையாக சினேஹா, திருமணத்திற்கு அப்புறம் இவர் நடிக்கும் திரைப்படம். நிறைவான நடிப்பால் நம்மை கவர்கிறார். 

பாராட்டபடவேண்டிய முக்கியமான நபர் டைரக்டர் G N R .குமாரவேலன் தான். கிஷோர், சினேஹா இருவரும் நல்ல நடிகர்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே ஆனால் இயக்குனர் குமாரவேலன் அப்படி அல்ல. தனது முதல் படமான யுவன் யுவதி பிளாப், இந்த படம் வாழ்வா சாவா மாதிரி தான். குமாரவேலன் நீங்க ஒரு இயக்குனரா “ஹரிதாசில்” ஜெயிச்சுடிங்க. ஹிந்தியில் எப்படி ஒரு தாரே சமீன் பெரோ அது போல தமிழுக்கு “ஹரிதாஸ்”. 

இப் படத்தினை பார்க்கும் அனைவருக்கும் ஆடிசம் குறைபாடுள்ள குழந்தைகளை எப்படி நாம் பார்க்கவேண்டும் என்று ஒரு விழிப்புணர்ச்சி கண்டிப்பாக வரும். அதற்காகவே நாம் இயக்குனரை பாராட்டலாம். பரோட்டா சூரி ஆங்காங்கே சிரிப்பூடுகிறார்.

அந்நியன், வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற மிக பிரமாண்ட படங்களின் ஒளிபதிவாளர் R.ரத்தினவேலு இப்படத்தை ஒளிபதிவு செய்திருப்பது படத்தின் மிகபெரிய பலம். விஜய் அண்டனியின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பிண்ணனி இசை அருமை. ராஜா முகமதுவின் எடிட்டிங், லால் குடி இளையராஜாவின் கலை மற்றும் அண்ணாமலையின் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கிறது. 

படத்தில் ஆங்காங்கே திரைக்கதை மந்தமாக போகிறது. இடைவேளைக்கு அப்புறம் கதை முக்கால்வாசி கிஷோர் ப்ரித்திவியை சுற்றியே செல்கிறது. இதில் கடத்தல் நாடகம், வில்லன் எல்லாம் காணாமல் போயி கடைசியில் கிளைமாக்ஸில் வருகிறார்கள். திரைக்கதையில் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம்.

சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் “ஹரிதாஸ்” நம்மை கவர்கிறான்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget