யுஎஸ், யுகே யில் விஸ்வரூபம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சென்ற வாரம் வெளியான கடல், டேவிட் படத்தைவிட விஸ்வரூபத்துக்கே அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
யுகே யில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் இந்தியப் படங்களில் ரேஸ் 2 தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம்
அறுபது திரையிடல்களில் 1,54,205 பவுண்ட்கள் வசூலித்துள்ளது.
விஸ்வரூபதிற்கு இரண்டாவது இடம். சென்ற வார இறுதியில் 20 திரையிடல்களில் 75,140 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. இதுவரையான அதன் யுகே வல் 1.86 கோடி.
கடல் படம் வெளியான முதல் மூன்று தினங்களில் பன்னிரெண்டு திரையிடல்களில் 24,601 பவுண்ட்கள் - நமது ரூபாய் மதிப்பில் 20.54 லட்சங்களை வசூலித்துள்ளது. மணிரத்னம் படமொன்று இவ்வளவு குறைவான ஓபனிங்கை பெற்றிருப்பது இதுவே முதல்முறை.
டேவிட் பதினான்கு திரையிடல்களில் 9.48 லட்சங்களை மட்டுமே வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
யுஎஸ்ஏ யிலும் இதே வரிசையில்தான் படங்கள் உள்ளன. முதலில் ரேஸ் 2. இதுவரை 7.31 கோடிகளை வசூலித்துள்ளது. இரண்டாவது விஸ்வரூபம் தமிழ். சென்ற வார இறுதியில் 43 திரையிடல்களில் 2,03,901 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ்ஏ வசூல் 4.89 கோடிகள்.
அதற்கு அடுத்த இடத்தில் கடல். முதல் மூன்று தினங்களில் 39 திரையிடல்களில் 38.19 லட்சங்களை வசூலித்துள்ளது. அதையடுத்து விஸ்வரூபம் தெலுங்கு. 21 திரையிடல்களில் 55,251 டாலர்கள். இதுவரை தெலுங்கு பதிப்பின் வசூல் மட்டும் 89.07 லட்சங்கள்.
டேவிட் 12 திரையிடல்களில் 3.29 லட்சங்களை மட்டுமே வசூலித்து பின் தங்கியுள்ளது.