4. அலெக்ஸ் பாண்டியன்
நான்கு வாரங்கள் முடிவில் இந்த அறுவைப் படம் 4.4 கோடிகளை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 1.5 லட்சங்கள். வார நாட்களில் 11 லட்சங்கள்.
3. கண்ணா திருட்டு லட்டு தின்ன ஆசையா
பாக்யராஜின் படத்தை அப்பட்டமாக அடித்து எடுத்திருக்கும் இந்தப் படம் சென்ற வார இறுதியில் 14.9 லட்சங்களையும், வார நாட்களில் 47.3 லட்சங்களையும்
வசூலித்துள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 6.3 கோடிகள்.
2. டேவிட்
காட்... சீயானுக்கா இந்த நிலைமை? அதுவும் விக்ரமுடன் ஜீவா நடித்திருக்கும் படத்துக்கு? டப்பா படங்களே ஒரு கோடியை ஜஸ்ட் லைக் தட் தாண்டும் போது இந்த இருபெரும் ஹீரோக்கள் நடித்த படம் முதல் மூன்று தினங்களில் 71.4 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இது பவர் ஸ்டாரின் கண்ணா திருட்டு லட்டு தின்ன ஆசையா படத்தின் ஓபனிங்கைவிட மிகக்குறைவு.
1. கடல்
மணிரத்னத்தின் மீது தமிழக ஜனங்களுக்கு இன்னும் மதிப்பு, மரியாதை இருக்கிறது. இல்லாவிடில் இப்படியொரு ஓபனிங் சாத்தியமா? முதல் மூன்று தினங்களில் சென்னையில் மட்டும் 1.7 கோடியை வசூலித்துள்ளது கடல். இதன் அடுத்தடுத்த நாட்களின் வசூல் மணிரத்னம் ஜனங்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பொறுத்து மாறுபடும்.