பாரம்பரிய கலைகள் தமிழத்திலிருந்து சீனாவிற்கு இடம் பெயர்ந்தது, என வரலாற்று ஆய்வாளர்கள், பல விதங்களில் நிரூபிக்க முயற்சிக்கின்றனர். கலைகள் மட்டுமல்ல, காலண்டரும் இங்கிருந்து தான் சென்றது, என்கிறார் மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த கவிதா. சீன ஜோதிடமும் 12 ராசிச் சக்கரங்களை கொண்டுள்ளது. நமது முறையில் மாடு, ஆடு, மீன் போன்ற உயிரினங்களோடு,
தராசு, குடம் போன்ற அம்சங்கள் ராசிச் சக்கரத்தில் உள்ளன. சீன ஜோதிடத்தில் 12 மிருகங்களை கொண்டே, ஒரு ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களும் குறிப்பிடப்படுகிறது. சீனாவில் 2012ம் ஆண்டு டிராகன் ஆண்டு. 2013ம் ஆண்டு பாம்பு ஆண்டு (பிப்., 10) பிறக்கிறது. நம்மூரைப் போல், புத்தாண்டு எப்படி அமைய போகிறதோ என பல தரப்பினர் எதிர்பார்ப்புகளில் உள்ளனர். அதே போன்று இங்கும் சீன ஜோதிடப்படி, 12 ராசிகளுக்கான பலன்கள் எப்படி அமையப் போகின்றன, என்பதை பெங்சூயி (சீன வாஸ்து) முறைப்படி கவிதா கணித்து உள்ளார். இதில் சில உதாரணங்கள் மட்டும்...
எலி ஆண்டு: 1900 -1912 - 1924 - 1936 - 1948 - 1960 - 1972 - 1984 - 1996 - 2008.
பணவரவு சீராக இருக்கும். ஜூன் மாதத்திற்கு மேல் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். கணவன், மனைவி கருத்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் வீண் விவாதங்களை தவிர்க்கலாம்.
எருது ஆண்டு: 1901, 1913 - 1925, 1937 - 1949 - 1961 - 1973 - 1985 - 1997 - 2009.
எருது ஆண்டில் பிறந்தவர்களுக்கு 2013 அதிர்ஷ்ட ஆண்டு. பணியில் இருப்போருக்கு மேலதிகாரிகளின் பாராட்டு, வெளிநாட்டு வேலை, வேலையில் பதவி உயர்வு அனைத்தும் கிடைக்கும்.
இப்படி அனைத்து ஆண்டுகளிலும் பிறந்தவர் களுக்கான ராசி பலன்கள் கணிக்க பட்டு உள்ளன.
முயல் ஆண்டு: 1903 -1915 - 1927 - 1939 - 1951 - 1963 - 1975 - 1987 - 1999.
புலி: 1902 - 1914 - 1929 - 1938 - 1950 - 1962 - 1974 - 1986 - 1988.
டிராகன்: 1904 - 1916 - 1924 - 1940 - 1952 - 1964 - 1976 - 1988 - 2000 - 2012.
பாம்பு: 1905 - 1917 -1929 - 1941 - 1953 - 1965 - 1977 - 1989 - 2001-2013
குதிரை: 1906 - 1918 - 1930 - 1942 - 1954 - 1966 - 1978 - 1990 - 2002.
ஆடு: 1097 - 1919 - 1931 - 1943 - 1955 - 1967 - 1979 - 1991 - 2003.
பன்றி: 1947 - 1959 - 1971 - 1983 - 1995 - 2007.
குரங்கு: 1908 - 1920 - 1932 - 1944 - 1956 - 1968 - 1980 - 1992 - 2004.
சேவல் : 1909 - 1921 - 1933 - 1745 - 1907 - 1969 - 1981 - 1993 - 2005.
நாய் : 1910 - 1922 - 1934 - 1946 - 1958 - 1970 - 1982 - 1994 - 2006.
இந்த ஜோதிட முறை இலங்கையிலும் பின்பற்றப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த நாடுக ளுக்கு இடையே உள்ள கேந்திர நிலையின் ஒற்றுமைகள் தான்