Awake ஹாலிவுட் சினிமா விமர்சனம்


ஒவ்வொருநாளும் கோடிக் கணக்கானோருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதில் சுமார் சில ஆயிரக் கணக்கானோருக்கு இந்த மக்க ஊசிகள் சரியாக வேலைசெய்வதில்லை என்று சொன்னால் நம்புவீர்களா?? இதில் சிக்கல் என்னவென்றால், இவர்களால் சத்தம் போட்டு பேசக்கூடியதாகவோ அல்லது சைகைகள் காட்டக் கூடியதாகவோ இருக்காவிட்டாலும், இவர்களால் தம்மைச் சுற்றி
நடப்பவற்றைக் காணமுடியும் அத்துடன் சிகிச்சை வலியையும் உணரமுடியும். உங்கள் நெஞ்சில் அறுவைச் சிகிச்சை பிளேடை வைத்து நெஞ்சைப் பிளந்து இதயம் வரை பார்க்கும் வலியை உணர்ந்து அதை வாயால் கத்த முடியாத நிலைக்கு போனால் என்னாகும்?? அந்த நிலையில் உள்ள ஒருவரது கதையே இந்த திரைப்படம்.

பணம், அழகான காதலி, அன்பான அன்னையார் அனைத்தும் இருந்தும் நாயகன் கிளைட்டனுக்கு விதி சரியில்லை. இதயத்தில் கோளாறு உடைய இந்தச் செல்வந்தன் ஒரு இதய மாற்று சிகிச்சைக்கு கட்டாயம் உள்ளாக வேண்டிய நிலமை. நல்ல வேளையாக இவரின் தோழனாக ஒரு இதய மாற்று சிகிச்சை நிபுணர் அறிமுகம் ஆகின்றார்.
நட்பின் அடையாளமாக நண்பன் மேல் கடும் நம்பிக்கை வைக்கும் கிளைட்டன், நண்பரின் தயவிலேயே தனது இதய மாற்று சிகிச்சையை நடத்த முடிவெடுக்கின்றார்.

க்ளைட்டனின் தாயார் அமெரிக்காவின் சிறந்த ஒரு வைத்திய நிபுனர் மூலமே இந்த இதய அறுவை சிகிச்சையை நடத்த விளைகின்றார். ஆனாலும் நண்பன் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கையால் வைத்தியர் ஜாக்கிடமே தான் இதய மாற்று சிகிச்சை செய்ய விரும்புவதாக தனது கோடீஸ்வர தாயாரிடம் அறுதியாகக் கூறிவிடுகின்றான் இந்தத் தனயன்.

ஒரு நாள் மாற்று இதயச் சிகிச்சைக்கு ஏற்ற ஒரு இதயம் கிடைக்கின்றது. சந்தோஷமாக நண்பன் ஜாக்கின் உதவியுடன் அன்னையாரின் எதிர்ப்பையும் புறக்கணித்து சத்திர சிகிச்சை நடக்கின்றது.
இங்கே தான் கிளைட்டனுக்கு Anesthesia awareness, ஏற்படுகின்றது. இதன் பின்னரே கதை சூடுபிடிக்கத் தொடங்குகின்றது. இதய மாற்று சிகிச்சை நடைபெறும் போது நடக்கும் சம்பாஷணை அனைத்தையும் கேட்கும் நிலமைக்கு கிளைட்டன் தள்ளப்படுகின்றான்.

இவ்வடமே கதையின் திருப்பு முனை. இதன் பிறகு கதையில் என்ன நடக்கின்றது என்பதைச் சொல்வதும் அழகல்ல.

திரைப்படம் பார்த்து முடித்த பின்னர் அருமையான ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி மனதில் கிடைத்தது. டாக்டரைக் காட்டி ஆரம்பிக்கும் திரைப்படம் டாக்டரை காட்டியே முடிகின்றது. வைத்திய முறைகளை தப்பாக இந்த திரைப்படத்தில் காட்டினார்கள் என்று குறைகள் முன்வைக்கப் பட்டாலும் அமெரிக்காவில் திரைப்படம் சூப்பர் ஹிட்டாம்.
அழகான காதல் கதை யூ டேர்ண் போட்டு அதகளப் படும் இடைவேளையின் பிறகு. பார்த்து இரசிக்கக்கூடிய திரைப்படம் ஒன்று.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget