தங்கத்தின் விலை குறைவுக்கு முக்கிய காரணம் என்ன?


சர்வதேச சந்தையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் நாடு, தங்கத்தை விற்பனை செய்து வருவதால், உலக நாடுகளிலும், இந்தியாவிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சைப்ரஸ் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்க அந்நாடு, 53 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய, தங்கத்தை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய துவங்கி உள்ளது.இந்த தங்கத்தின் வருகையால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளதால், நடப்பாண்டில் நேற்று வரை, தங்கத்தின் விலை கிராமுக்கு, 288 ரூபாயும், பவுனுக்கு, 2,304 ரூபாயும் சரிந்துள்ளது. இந்த சரிவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 

கடந்த, 2012 டிசம்பர் கடைசி வாரத்தில், தங்கம் கிராம், 3,010 ரூபாய்க்கும், பவுன், 24, 080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 2013 ஜனவரி மாதம் முதல், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. ஜனவரி கடைசி வாரத்தில் கிராமுக்கு, 56 ரூபாயும், பவுனுக்கு, 448 ரூபாய் வரையிலும் சரிவு ஏறபட்டு, கிராம் 2,864 ரூபாய்க்கும், பவுன், 22, 912 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அதை அடுத்து ஃபிப்ரவரி மாதத்தில், கிராமுக்கு, 73 ரூபாய் வரையும், பவுனுக்கு, 584 ரூபாய் வரையில் சரிவை சந்தித்தது. மார்ச் மாதத்தில் கிராமுக்கு, 60 ரூபாய் வரையிலும், பவுனுக்கு, 480 ரூபாய் வரையில் சரிவு ஏற்பட்டது.கடந்த, 2009 முதல், 2012 வரை, தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வந்த தங்கத்தின் விலை, 2013 துவங்கிய பின், மூன்று மாதங்களில் கிராமுக்கு, 189 ரூபாய் வரையிலும் பவுனுக்கு, 1,512 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget