பெரும்பாலான நடிகைகள், "நடிப்பதற்கே நேரம் போதவில்லை. இதற்கிடையே, எதற்கு பேஸ்புக், டுவிட்டர் என்று நினைக்கின்றனர். ஆனால், அமலா பால், "இன்றைய சூழலில், சமூக வலைத் தளங்களின் பயன்பாடு ரொம்பவும் அவசியம் என்கிறார். அவர் கூறுகையில், "ஒரு காலத்தில் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர், நடிகைகளுக்கு கடிதம் எழுதினர். இப்போது, அதையெல்லாம் மறந்து விட்டு, எஸ்.எம்.எஸ்.,
இணையதளம் மூலமாக தொடர்பு கொள்கின்றனர்.அதனால் தான், என் ரசிகர்களுக்கு பதில் கொடுக்கவும், ரசிகர்களின் எண்ணிக்கையை பெருக்கவும், பேஸ்புக் பயன்படுத்துகிறேன் என்கிறார். தினமும் தன் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை, பேஸ்புக்கில் எழுதுகிறாராம். "இதன் காரணமாக, என்னைப் பற்றிய உண்மை தகவல்களை, ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவதால், மீடியாக்களில் பரவும் தப்பான செய்திகளையும், சரி செய்ய முடிகிறது என்கிறார்.