குட்டிப்புலி சினிமா விமர்சனம்

ஊருக்குள் சண்டியராக திரியும் மகன் காதலினால் எல்லாத்தையும் கைவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் போது பழைய எதிரிகளால் ஆபத்து நேருகிறது. அவனது அம்மா எல்லாவற்றையும் முடித்து வைத்து மகனை எப்படி கரை சேர்க்கிறாள் என்பதே படத்தின் கதை. தமிழ்ப்படங்கள் குறிப்பிட்ட சாதிகளை குறி வைத்து படம் எடுப்பதை கைவிட்டு பல நாட்கள் ஆகிறது. சசிகுமாரின் படங்கள் மட்டும் ஏன் தேவர் சாதியினை குறி வைத்து எடுக்கிறார்கள்
என்பது மட்டும் புரியவில்லை. இது சாதி பாசமா, இல்லை வெறியா?

நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன் கடைசியாக இந்த படம் வரை எல்லாவற்றிலுமே கதாநாயகன் தேவர் சமூகத்தை சேர்ந்தவராகவே வருவதன் ரகசியம் தான் புரியவில்லை. கொஞ்சம் மற்ற சாதியினரையும் காட்டுங்கப்பா.

படம் கதையாக சொல்லும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் பாதி படத்தை சொதப்பி இருக்கிறார்கள். படத்தின் நீளம் வேறு பொறுமையை சோதிக்கிறது. 

சசிகுமார் படத்திற்கு படம் நடிப்பில் நன்கு மெருகேறி வருகிறார். படத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு திரியும் சண்டியர்த்தனம் பொருந்துகிறது. காமெடியிலும் அசத்தியிருக்கிறார். 

படம் முழுக்க லுங்கியில் வந்தாலும் இடைவேளைக்கு பின்பு ஒரு காட்சியில் மாடர்ன் டிரெஸ்ஸில் அசத்துகிறார். தாய்ப்பாசத்தில் மருகும் போது சற்று கலங்க வைக்கிறார்.

லட்சுமி மேனன் வருகிறார் செல்கிறார் அவ்வளவே, முந்தைய படங்களைப் போல் இந்த படத்தில் பெரிதாக நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை. மேக்கப்பும் ஓவராக போட்டு கலங்கடிக்கிறார்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

படத்தில் மொத்த பலமும் சரண்யா மட்டும் தான். அம்மா வேடத்திற்கு வழக்கம் போலவே பாந்தமாக பொருந்திப் போகிறார். மகனுக்காக கொலையே செய்யும் கேரக்டர். மகனின் எதிரிகள் ஒவ்வொருவரிடமும் சென்று மன்னிப்பு கேட்கும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.

படத்தில் மைனஸ் விஷயங்கள் சற்று கூடுதலாக இருப்பது தான் சற்று வருத்தமளிக்கிறது. 

சிலம்பாட்டம் என்பது சரியாக இருக்க வேண்டும், சுமாரான அளவில் இருந்தாலும் சொதப்பி விடும். தூறல் நின்னு போச்சு படத்தில் பாக்யராஜ் சிலம்பாட்டம் ஆடியிருப்பது இப்ப வரைக்கும் கண்ணில் நிற்கிறது. தேவர்மகன் படத்தில் கமல் கூட சற்று சிரமப்பட்டு முயற்சித்து இருப்பார்.

மற்ற நடிகர்கள் எல்லாம் கட் ஷாட்களில் மாயாஜாலம் காட்டியிருப்பார்கள். இதிலும் சரியான டெம்போவில் வந்திருக்க வேண்டிய சிலம்பாட்ட சண்டையில் கட் ஷாட் வைத்தே சமாளித்திருக்கிறார்கள். 

படத்தில் ஏகப்பட்ட பஞ்ச் வசனங்கள் இருக்கிறது. அடுத்த ஆக்சன் ஹீரோவாக முயற்சி என்றால் பார்த்து சாரே, விஷாலை பார்த்து சற்று கவனமுடன் இருக்கவும்.

படத்தின் திரைக்கதை ஒரே நேர்க்கோட்டில் சென்றிருக்க வேண்டும். ஒரு சில கிளைக் காட்சிகள் இருந்தாலும் எந்த இடத்திலாவது படத்தின் திரைக்கதையில் வந்து இணைய வேண்டும். 

ஆனால் இந்த படத்தில் படத்தின் கதைக்கு சம்பந்தமேயில்லாமல் பல காட்சிகள் இருக்கின்றன. படத்தின் க்ளைமாக்ஸில் ஏதோ நடக்கப் போகிறது என்று முன்பே தெரிந்து விடுவதால் இது போன்ற சம்பந்தமில்லா காட்சிகள் அந்த டெம்ப்போவை குறைக்கின்றன. 

பாலா மற்றும் சில கனா காணும் காலங்கள் நடிகர்கள் படத்திற்கு எந்த வித தேவையுமில்லாமல் வந்து செல்கிறார்கள். அவை எல்லாமே நகைச்சுவை என்ற பெயரில் கடியாகத்தான் உள்ளது. 

சுந்தரபாண்டியனின் அதிரடி வெற்றியும் அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும் தான் இந்த படத்தின் வசூலை பாதிக்கப் போகிறது. இரண்டாம் பாதி மெதுவாக செல்தல், பாடல்கள் உட்பட இன்னும் சில குறைகள் இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் படத்தினை ஒரு முறை கண்டு வரலாம். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget