மகளிர் கூந்தலை எளிமையாக பராமரிப்பது எப்படி?

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். 

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். 

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். 

கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை தலையில் முடி வளர ஆரம்பிக்கும்.. 

கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் சேகரிக்கவும். இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும். இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும். 

இதை தலையில் தேய்த்து 10 நிமிடம் மிதமான வெயிலில் நிற்கவும். பின்னர் குளிக்கவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறைந்து தலைமுடி கருகருவென ஜொலிக்கும்.

செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம். 

ஷாம்பை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய செம்பருத்தி பயன்படுகிறது. இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். 

உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்தி பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நைசாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம். இவ்வாறு தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல பளபளக்கும். 

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை. 

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும். 

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, கூந்தல் படிப்படியாக நன்கு வளர ஆரம்பிக்கும். 

செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget