கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

5. க‌ரிமேடு
பாக்ஸ் ஆஃபிஸில் க‌ரிமேடு ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ராம.நாராயணன் வெளியிட்ட இப்படம் அவ‌ரின் பிற வெளியீடுகளைப் போல (முக்கியமாக அருந்ததி) வசூலை வா‌ரிக்குவிக்கவில்லை. முதல் மூன்று தினங்களில் சென்னையில் 5.4 லட்சங்கள் மட்டுமே. 

ராம.நாராயணனின் பிற வெளியீடுகள் எல்லாம் குடும்பத்தோடு பார்க்கத் தகுந்தவை. க‌ரிமேடு விஷயத்தில் குடும்பங்கள் தியேட்டர் பக்கமே திரும்பாது. இதுதான் அவரை முதல்முறையாக சறுக்க வைத்திருக்கிறது. என்றாலும் தமிழகம் முழுவதுக்குமான வசூல் அவரை நஷ்டப்படுத்திவிடாது.

4. மாசாணி
க‌ரிமேடுடன் ஒப்பிடுகையில் மாசாணிக்கு விளம்பரமே இல்லை. இனியா, ராம்கி என்று கொஞ்சம் டல்லடிக்கும் காஸ்டிங். இருந்தும் வார இறுதியில் 7.8 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

3. நேரம்
திரைக்கதையில் டைமிங் மிஸ்ஸானதால் நேரத்தில் சுவாரஸிய பஞ்சம். இரண்டாவது வார இறுதியில் 18.6 லட்சங்களையும், வார நாட்களில் 17.7 லட்சங்களையும் வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரையான சென்னை வசூல் 73 லட்சங்கள்.

2. எதிர்நீச்சல்
சிவ கார்த்திகேயனுக்கு சுக்கிர திசை. நான்காவது வார இறுதியில் 26.7 லட்சங்கள், வார நாட்களில் வசூல் 25.3 லட்சங்கள். இதுவரை சென்னையில் மட்டும் 6.04 கோடிகளை வசூலித்திருக்கிறது.

1. சூது கவ்வும்
தமிழ் சினிமாவின் ஃபார்முலாக்களை அடித்து நொறுக்கி புதுசான ட்ராக்கில் படத்தை எடுத்ததற்கான வெகுமதி... தொடர்ந்து மூன்றாவது வாரமாக அதே முதலிடம். வார இறுதியில் 68.3 லட்சங்களையும், வார நாட்களில் 74.02 லட்சங்களையும் வசூலித்திருக்கிறது. இதுவரையான சென்னை வசூல் 6.98 கோடிகள். 

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget