பெண்களுக்கான கூந்தல் பராமரிப்பு முறைகள்


ஒருவரின் கூந்தல் எந்ததன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடை பிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். எண்ணெய்ப் பசை தன்மையுள்ள கூந்தலுக்கான சில வழிகள்..... 

தலையில் காணப்படும் எண்ணெய் சுரப்பிகள் அதிகளவில் சுரப்பதால், கூந்தல் எண்ணெய்ப் பசையுடன் காணப்படுகிறது.
கூந்தல் எண்ணெய் தன்மையுடன் இருப்பதால், தூசு மற்றும் அழுக்கு போன்றவை எளிதில் சேர்ந்து விடும். 

* எண்ணெய்ப் பசையான கூந்தல் உடையவர்கள், அடிக்கடி தலைக்குக் குளிப்பதோடு, தலையில் தூசு மற்றும் அழுக்கு போன்றவை சேராமல் பராமரிக்க வேண்டும். 

* எண்ணெய்த் தன்மை கூந்தலுடையவ ர்கள் மருதாணி அல்லது எலுமிச்சை போன்ற பொருட்கள் கலந்த ஷாம்புக்களாக வாங்கி பயன்படுத்துவது நல்லது. 

* வேப்பிலைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து குளிக்க, தலையில் அதிகப்படியாக காணப்படும் எண்ணெய் பிசு பிசுப்பு நீங்கும். 

* கேரட்டை வேகவைத்து மசித்து, தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், எண்ணெய்பசை கட்டுப்படும். மேலும் எண்ணெய்ப் பசை கூந்தலுடையவர்கள் உணவில் எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்வது நல்லது. 

இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றி உங்களின் கூந்தல் பராமரியுங்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget