திருமணமானவுடன் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன் - உங்களுக்கு தெரியுமா?

கருத்தம முனிவரின் மகளான அருந்ததி வசிஷ்டரின் மனைவியானாள். நூறு பிள்ளைகளின் தாய். சப்தரிஷி மண்டலம் என்னும் ஏழுநட்சத்திரக் கூட்டத்தில் வசிஷ்டரும், அருந்ததியும் அருகருகே இருப்பதாக ஐதீகம். திருமணச்சடங்கின் போது, மணமகனும் மணமகளும் அக்னியை மூன்று முறை வலம் வந்து, பதிவிரதையான அருந்ததியையும், வசிஷ்டரையும் வானத்தை நோக்கி வணங்குவது வழக்கம்.
சிவபெருமான் திகம்பரர் என்னும் பெயரில், பெண்களின் மனதை மயக்கும் அழகுடன் தாருகாவனத்திற்கு வந்தார். அப்போது ரிஷிபத்தினிகள், தாங்கள் திருமணமானவர்கள் என்பதையும் மறந்து அவரது அழகில் மயங்கினர். அருந்ததி மட்டும் சிறிதும் சலனமில்லாமல் இருந்தாள். அருந்ததியைப் போல, கற்புத்திறம் மிக்கவர்களாக பெண்கள் திகழ வேண்டும் என்பதற்காக அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு நடத்தப்படுகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget