கர்ப்பிணிகள் தங்கள் உடல் நலனில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். ஏதேனும் விஷேசத்திற்காக கர்ப்பிணிகள் பயணம் செய்வதாக இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வேலையையும், அணுகுமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். பயணம் செய்யும் காலத்தில் சில வழிமுறைகளை பின்பற்றினால் கர்ப்பிணிகள் கருவில் உள்ள குழந்தைகளை கவனமாக பாதுகாக்கலாம்.
கர்ப்பம் தரித்த காலத்தில் பயணம் செய்ய பாதுகாப்பான மாதம் மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதங்கள் வரை மட்டுமே. இந்த மாதங்களில் பயணம் செய்வது மட்டுமே பாதுகாப்பானது. கர்ப்பம் தரித்த முதல் இரண்டு மாதத்தில் அதிக தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் அக்காலக்கட்டத்தில் தான் கரு வளர்ச்சி அடைகிறது. மேலும் முதல் இரண்டு மாதத்தில் நீங்கள் பயணம் செய்யும் போது கருசிதைவு ஏற்பட நிறையவே வாய்ப்புள்ளது. தாயின் உடல் நலமும் பாதிப்பிற்குள்ளாகும்.
கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய கூடாது என்று கூறப்படுவதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம், கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், போன்றவைகள் ஆகும். கருவுற்ற காலத்தில் பயணம் செய்யும் போது வளர்ச்சி குறைந்த குழந்தை பிறக்க நேரிடலாம்.
கருசிதைவிற்கும் அதிக வாய்ப்புள்ளது.. ஒரு வேளை கருவில் இரட்டை குழந்தையாக இருப்பின் இரு குழந்தைகளும் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை கவனத்தில் கொண்டு பயணம் செய்வதை முடிவெடுக்க வேண்டும் மேலும் நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பின் உங்கள் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது அவசியம்.