ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று ரேஷன் கார்டு தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி. அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.
ரேஷன் கார்டு:
புதிய ரேசன் கார்டு வாங்க கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும், நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையைத் தர வேண்டும்.
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய ரேசன் கார்டு கிடைத்துவிடும்.
நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.