நீங்கள் விமான பணிப்பெண் ஆக வேண்டுமா?

பெண்களின் பலருக்கு விமான பணிப்பெண் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும். அதற்கு அழகு மட்டும் இருந்தால் போதாது. ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வை எதிர் நோக்கி பயணிக்க வேண்டும். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். 

தன்னம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, சாதுரியம்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். விமான பணிப்பெண் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்.... 

* முதலில் உங்களுக்கு விமான பணிப்பெண் ஆக வேண்டும் என்ற ஆர்வமும், அத்துறையில் கவனமும் அவசியம் இருக்க வேண்டும். 

* எதற்கும் பதற்றப்படாத மன அமைதியும், காலம் தவறாமையும் அவசியம். 

* காதில் போடும் ஆபரணத்தைத் தவிர வேறு நகைகள் எதுவும் வேண்டாம். ஓரளவு அழகாக இருந்தால் போதும். ஓவர் மேக்-அப் தேவையில்லை. 

* முகத்தின் முன்புறம் முடியை விடுவது... ஹேர் டை அடித்திருப்பது என்று எக்ஸ்ட்ராவாக எதுவும் தேவையில்லை. முடியை நன்றாக தூய்மை செய்து கொண்டை போட்டு "பின்" அடித்திருந்தால் போதும். 

* ஸ்கர்ட் அணிந்திருந்தால் காலுறைகள் அவசியம். அதேபோல் உட்காரும்போது ஸ்கர்ட் சிறியதாக இருக்கக் கூடாது. உடைக்கு தகுந்த ஷூவை அணியவேண்டும். 

* உட்கார்ந்தபடி கால்களை ஆட்டுவதோ...அசைப்பதோ கூடவே கூடாது. 

* தேர்வாளர்களை அவர்களின் பெயரைச் சொல்லி 'விஷ்' பண்ணுவது நல்லது. உட்காரச் சொல்லும்வரை காத்திருக்க வேண்டும். தேர்வின் போது ரொம்ப ரிலாக்ஸாக இருக்கவேண்டும். தேர்வாளர்கள் கேள்விகளுக்கு விடைகளை யோசித்துச் சொல்வது நல்லது. எதற்கும் அவசரமோ, பதட்டமோ வேண்டவே வேண்டாம். கேள்வி புரியவில்லை என்றால் மீண்டும் கூறுமாறு தேர்வாளர்களிடம் கேட்கலாம். 

* வேகமாக பேசாமல் அமைதியாகவும், தெளிவாகவும் பேசவும். பதில்களை உதாரணத்துடன் முழுமையாக கூறுவது சிறப்பு. 

எல்லாவற்றையும் விட முக்கியமானது, முடிந்து வெளியே வரும்வரை சிரித்தவாறே பதில் சொல்ல வேண்டும். பேசும்போது தன்னம்பிக்கையுடன் பேசுவது சிறப்பு.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget