பொன்னான வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?

எந்த பிரச்சனைகளை உங்களால் மாற்ற முடியாதோ அதனைப் பற்றி சிந்தித்து கவலைப்படாதீர்கள். காலம் பொன் போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இந்த உலகம் என்னும் விசாலமான நாடகத்தில் நாம் அனைவரும் நடிகர்கள். அவரவரது பாகத்தை சரியாக
நடித்துக்கொண்டிருக்கின்றோம். எனவே பிறரது நடிப்பைப் பார்த்து கவலைப்பட வேண்டாம். 

பிறரை மாற்ற வேண்டும் என்ற இச்சையின் மூலம் மானசீக மன இறுக்கம் அதிகரிக்கின்றது. முதலில் தன்னை மாற்றிக் கொள்ளும் இலட்சியம் வைப்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். 

பொறாமைப் படுவதனால் மனமானது எரிகின்றது. ஆனால் ஈஸ்வரிய சிந்தனை செய்வதன் மூலம் மனம் அளவற்ற குளிர்ச்சியை அனுபவம் செய்கின்றது. 

மகிழ்ச்சி கொடுப்பதன் மூலமே மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆகையால் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் முயற்சி செய்யுங்கள். ஒருபொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்கும் சிந்தனையே செய்யாதீர்கள். 

பிரச்சனைகளை நீங்கள் எதிர் கொள்ளும் பொழுது உங்களது கடந்த கால கர்மத்தின் கணக்குகள் (எதிர் மறையான வினைப்பயன்கள்) முடிந்து கொண்டிருக்கின்றது என்று நினையுங்கள். 

உங்களுக்குள் இருக்கும் சூட்சும அகங்காரத்தை தியாகம் செய்யுங்கள். வரும் பொழுது எதுவும் கொண்டு வரவில்லை, திரும்பும் பொழுதும் எதுவும் கொண்டு செல்ல மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

நீங்கள் உங்களது அனைத்து கவலை களையும் பரம்பிதா பரமாத்மாவிடம் அர்ப்பணம் செய்து விடுங்கள். 

தினமும் சிறிது நேரமாவது இறைவனை நினைவு செய்யுங்கள். யோகப்பயிற்சியினால் ஏற்படும் மன மற்றும் சரீர மாற்றமானது மன இறுக்கம் மற்றும் கவலைகளிலிருந்து விலக்கி ஆரோக்கியத்தை நல்கும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget