சினிமாவில் என்னதான் சண்டை என்றாலும் இயக்குநருடன் ஒத்துப்போகாவிட்டாலும் படம் முடியும் வரை நடித்துக் கொடுத்துவிட்டுதான் வருவார்கள் கதாநாயகிகள். ஆனால் சின்னத்திரை சீரியல்களில் அப்படியில்லை. சில எபிசோடுகளிலேயே இவருக்குப் பதில் இவர் என்று கார்டு போட்டு ஆளையே மாற்றிவிடுவார்கள். சின்னச் சின்ன கதாபாத்திரங்களுக்குதான் இதுபோன்று கார்டு போட்டு வந்த சீரியல் இயக்குநர்கள் இப்போது
கதாநாயகிகளையே மாற்றிவிடுகின்றனர்.
பைரவி, சொந்த பந்தம், முத்தாரம், வாணி ராணி போன்ற பல சீரியல்களில் இதுபோன்று கார்டு போட்டு ஆளை மாற்றி நடிக்க வைக்கின்றனர். இதுபோன்ற மாறிய நடிகைகள் வேறு சீரியல்களில் சீரியசாக நடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது சீரியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுவார்கள். அப்படி காணாமல் போன நடிகைகள் பட்டியைலைப் பாருங்களேன்.
பைரவி தொடர் சன் டிவியில் ஞாயிறு இரவு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் முதலில் நடித்த நாயகி சுந்தராபுரம் ராதா. முதன் முதலாக இந்த சீரியலில்தான் நடித்தார் அப்புறம் திடீரென காணாமல் போனார்.
அதே பைரவியில் ராதாவிற்குப் பதில் நடிகை சுஜிதா நடித்தார். இவர் ஏற்கனவே சன் டிவியில் மருதாணி தொடரில் நடித்து வருகிறார். அப்புறம் என்ன பஞ்சாயத்தோ சுஜிதாவையும் காணலை. இப்போது யாரோ ஒரு சீரியல் நடிகை நடிக்கிறார். ( ஆவி தொடர் என்பதால் அடிக்கடி ஆள் மாறுகின்றனரோ என்னவோ?)
சன் டிவியில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் சொந்த பந்தம் தொடரின் கதாநாயகியும் மாறிவிட்டார். முதலில் சந்திரா லட்சுமணன்தான் இந்த தொடரின் நாயகி இப்போது அவரை தூக்கிவிட்டு அம்முவாகிய நான் பட நாயகி பாரதியைப் போட்டு விட்டார்கள்.
அதேபோல 12.30 மணிக்கு முத்தாரம் தொடரில் இரட்டை வேடத்தில் நடித்த தேவயாணி எந்த அறிவிப்பும் இல்லாமல் காணமல் போனார். அவருக்குப் பதில் விஜயலட்சுமி நடித்து வருகிறார்.
வாணி ராணி தொடரில் முதலில் ராதிகாவின் தம்பி மனைவி கதாபாத்திரத்தில் நடித்தவர் காயத்ரி. இரண்டே எபிசோடுகள்தான் நடித்தார் என்ன ஆயிற்றோ அவருக்குப் பதில் வேறொரு பெண் நடித்து வருகிறார்.
ஒவ்வொரு சீரியலும் கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகள் வரை போகிறது. அதற்குள் இன்னும் எத்தனை கதாநாயகிகள் மாறுவார்களோ தெரியலையே?