காதலை நளினமாக காட்டும் இன்னார்க்கு இன்னாரென்று

ஆசாமி’ படத்தின் இயக்குநர் ஆண்டாள் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘‘இன்னார்க்கு இன்னாரென்று...’’. இத்திரைப்படத்தை ‘‘ஏழுமலையான் மூவிஸ்’’ மற்றும் ‘‘நாயகன் சினி ஆர்ட்ஸ்’’ என்ற இரு நிறுவனங்கள் சார்பில் எஸ்.நாயகம் தயாரிக்கிறார். இதில் புதிதாக ஒரு சிலம்பரசன் அறிமுகமாகிறார். இவருடன் ஸ்டெபி, ஆந்திராவை சேர்ந்த அஞ்சனா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
 இப்படத்தில் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களான சந்தானபாரதி, விஜய் கிருஷ்ணராஜ், அனுமோகன் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் முன்னணி காமெடி நடிகர்கள் சிலரும் இந்த படத்தில் காமெடி காட்சிகளில் கலக்குகிறார்கள்.

வேகமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு வசந்தமணி இசையமைத்துள்ளார்.  இதன் இயக்குநர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியதுடன் பாடல்களும் எழுதியுள்ளார். இவருடன் பிறைசூடன், இளையகம்பன் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவை சாய்நட்ராஜ் கவனிக்கிறார்.

இதில் ‘கேட்டுக்க நண்பா கேட்டுக்க, மாத்திக்க நண்பா மாத்திக்க, மனசையும் சீக்கிரம் மாத்திக்க’ என்ற பாடலின் வரிகள் இளசுகளை தாளம் போடவைக்கும் ரகம்! இந்த பாடல் சூப்பர்ஹிட் என்று இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட படக்குழுவினர் பாராட்டுகின்றனர். இந்த படம் கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் வித்தியாசமான கதையுடன் காதலை நாகரீகமாக சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் ஆண்டாள் ரமேஷ். இப்படம் பற்றி அவர் மேலும் கூறியதாவது: ஹீரோவை முதலில் காதலித்த பெண் விதவையாக... அடுத்து காதலிக்கும் ‌பெண் விட்டுக்கொடுக்க... யாரை மணப்பது என்பதில் ஹீரோ முடிவெடுக்க முடியாமல் குழப்பத்துடன் தவிக்கிறார். கிளைமாக்ஸில் ஹீரோவின் குழப்பத்திற்கு விடை கிடைக்கும். அத்துடன் மிக அற்புதமாக வந்துள்ள 5 பாடல்களும் கதையின் உள்ளோட்டமாக இருப்பதால் படத்திற்கு பலமே பாடல்கள்தான் என்றும் கூறியுள்ளார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget