மகளிர் விவாகரத்து பற்றி நினைக்க முக்கிய காரணங்கள்

திருமண வாழ்வில் நாட்கள் ஓட ஓட பல தருணங்களை எதிர்கொள்ள பொறுமையும், தன்னடக்கமும் தேவை. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினாலும், வீட்டு வேலைகளுக்காக அங்கும் இங்கும் ஓடுவதாலும் டென்ஷன் ஏற்பட்டு தம்பதியினருக்கு இடையே பிரச்சனைகள் எழலாம். 

ஆனால் யாரால் இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து தடைகளை கடந்து போக முடிகிறதோ, அவர்களால் தான் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை வாழ முடியும். அதிலும் குழந்தைகளுக்காக பெண்கள் தங்கள் திருமண வாழ்வு வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவார்கள். 

தங்களின் பாதுகாப்பு தேவையை மனதில் வைத்து கொண்டே, கணவனுடன் திருமண பந்தத்தில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் நிதிக்காகவும், பெண்கள் தங்கள் கணவனை சார்ந்தே வாழ்கின்றனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் தன் கணவனை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலைகள் பெண்களுக்கு ஏற்படும். 

உயிரே இல்லாத ஒரு உறவோடு வாழ்வதற்கு பதிலாக, விவாகரத்து பெறுவதே சிறந்த வழி என்று எண்ணுவார்கள். . பெண்கள் கணவரை என்ன காரணங்களுக்காக விவாகரத்து செய்ய விரும்புகிறார்கள் என்று பார்க்கலாமா.... 

• கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்தால், பெண்கள் விவாகரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். திருமணமான போதிலும் கூட, ஆண்களுக்கு சபல புத்தி இருக்கக்கூடும். பிற பெண்களின் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். இதனைப் படித்த பெண்களால் சகித்துக் கொள்ள முடியாமல் தான் பெண்கள் விவாகரத்தை விரும்புகிறார்கள். 

• வேலைக்கு போகும் பெண்களாக இருந்தாலும் கணவன்மார்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலோ அல்லது தாங்க முடியாத குணாதிசயத்தோடு நடந்தாலோ, பெண்கள் இந்த முடிவை எடுப்பார்கள். ஏனெனல் நிதி விஷயத்தில் யாரையும் சாராமல் சுயமாக சம்பாதிப்பதால், பெண்களுக்கு இந்த தைரியம் வருகிறது. 

• குடும்ப சுமைகள் மற்றும் பிரச்சனைகளும் கூட ஒரு பெண் விவாகரத்து கேட்க ஒரு காரணமாகும். சில சமயம் பெண்களுக்கு மாமியாரின் தொந்தரவு அதிகரிக்கலாம். மாமியார் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கலாம். இது பெண்களுக்கு பிடிக்காமல் போகலாம். கிழக்கு பக்கம் பல பேர் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தாலும், இப்போது அதெல்லாம் மாறி வருகிறது. 

பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு இல்லாததாலும், பிரச்சனைகள் வந்து விவாகரத்தில் போய் முடிகிறது. மேலும் இக்காலத்து பெண்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் தன்னுடைய திருமண வாழ்வில் தலையிடுவதை விரும்புவதில்லை. 

ஆனால் மேற்கு பக்கம் இப்படி நடப்பதில்லை. ஆனால் சிலநேரம் கணவன் தன் தாயின் மீது அதிக பற்றுதலை காட்டும் போதும், மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தில் போய் முடியும். 

• சலிப்புத்தன்மையும், பெண்கள் விவாகரத்து கோருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதிலும் பெண்களுக்கு தங்களுடைய திருமண வாழ்க்கை ஒரே மாதிரியாக போய் கொண்டிருந்தால், அது அலுப்புத் தட்டிவிடுவதோடு, விவாகரத்தையும் கேட்க வைக்கும். 

• மனைவியை அடிப்பதனால் கூட ஒரு பெண் தன் கணவனை விட்டு விலக விவாகரத்தை எதிர்பார்க்கும் ஒரு காரணமாகும். மேற்கு மற்றும் கிழக்கு பக்கங்களில், குடிகார கணவன்கள் தங்கள் மனைவியை அடிக்கடி அடிப்பார்கள். 

மேற்கு பகுதியில் அப்படிப்பட்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் விவாகரத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் கிழக்குப் பக்கமோ பெண்களுக்கு அதிக படிப்பறிவு இல்லாததால், அவர்கள் தங்கள் கணவனோடே சேர்ந்து வாழ்கின்றனர். எந்நிலையிலும் படித்த பெண்கள் கண்டிப்பாக விவாகரத்தை எதிர்பார்ப்பார்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget