கிரெடிட் கார்டு வாங்கியவுடன் கவனிக்க வேண்டியவை

'கிரெடிட் கார்டு' பெற்றவுடன் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பதை பலரும் அறியாமல் உள்ளனர். அவர்களுக்கு....  

நீங்கள் சந்தேகப்படும் எந்த இணையதளத்திலும் உங்கள் கிரெடிட் கார்டு பற்றிய விவரத்தைக் கொடுக்க வேண்டாம். நன்கு தெரிந்த, நம்பிக்கையான இணையதளத்தில் மட்டும் உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தைக் கேட்டால் கொடுங்கள். 

யாராவது போனில் தொடர்புகொண்டு, உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தை, குறிப்பாக பின்பக்கம் இருக்கும் மூன்று எண்கள் பற்றிக் கேட்டால் எந்த விவரத்தையும் சொல்லாதீர்கள். வங்கியில் இருந்து யாரும் உங்களிடம் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு விவரத்தைக் கேட்க மாட்டார்கள். 

அப்படி யார் கேட்டாலும் எந்தத் தகவலையும் கொடுக்காமல் தொடர்பை துண்டித்து விடுங்கள். கடைக்காரரிடம் கிரெடிட் கார்டை கொடுக்கும் போது மெஷினில் கார்டை தேய்ப்பதை நீங்கள் ஒரு கண் பார்த்துக்கொள்வது நல்லது. 

உங்கள் கிரெடிட் கார்டை ஒருமுறை மட்டும் தேய்க்கிறாரா, நீங்கள் பார்ப்பது போல் கிரெடிட் கார்டு மெஷினை வைத்தி ருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள். கடைக்காரர் கொடுக்கும் ரசீதில், நீங்கள் வாங்கிய பொருளின் விலை சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொண்ட பிறகு கையெழுத்துப் போட வேண்டும். 

நீங்கள் கையெழுத்துப் போட்ட ரசீது கடைக்காரரிடமும், அதன் நகல் உங்களிடமும் இருக்கும். உங்களிடம் கொடுக்கப்படும் நகலை தூக்கி எறியாமல் பத்திரப்படுத்திக்கொள் ளுங்கள். மாத இறுதியில் உங்களுக்கு அனுப்பப்படும் கணக்கு விவரத்தோடு (statment) நீங்கள் வாங்கிய பொருட்களின் விலைப்பட்டியல் ஒத்துப் போகி றதா என்று பாருங்கள்.

மாதக் கணக்கு விவரத்தில் அதிகமாக பணம் குறிப்பிட்டிருந்தால், வங்கிக்கு அல்லது கார்டு நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் கிரெடிட் கார்டுக்கு காப்பீடு கூட பெறலாம். 

ஒருவேளை நீங்கள் கார்டை தொலைத்துவிட்டால், அது தொலைந்த நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் ஒரு வேளை கிரெடிட் கார்டை பயன்படுத்தி யார் எந்தப் பொருள் வாங்கியிருந்தாலும் 'இன்சூரன்ஸ் கிளெய்ம்' செய்யலாம். ஆனால் அதற்காக கார்டு தொலைந்து விட்டால் சும்மா இருந்துவிடக் கூடாது. 

வங்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு உங்கள் கார்டின் 16 இலக்க எண்களைச் சொல்லி யாரும் பயன்படுத்த முடியாதபடி தடுக்க வேண்டும். இவையெல்லாம் கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். கார்டை பயன்படுத்த பயன்படுத்த நீங்களாகவே பல விஷயங்களை அறிவீர்கள். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget