திருமணமான பெண்களைத்தான் அதிகமாக ரசிப்பார்கள் - வித்யா பாலன்

தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்துக்காக தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன். அதையடுத்து கஹானி படத்திலும் நடித்து பெரிதும் பேசப்பட்டார். பின்னர் சித்தார்த்ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார். அதனால் இனி வித்யாபாலன் நடிப்புக்கு குட்பை சொல்லி விடுவார் என்று தான் நினைத்தது பாலிவுட் பட உலகம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மீண்டும் நடிப்பு கோதாவில் குதித்துள்ளார் வித்யாபாலன். அதோடு, திருமணத்துக்குப்பிறகு எனது உடம்பு எடை போட்டு விட்டது.
ஆனால், இப்போதுதான் நான் நெளிவுசுழிவுடன் பார்க்க அழகாக தெரிகிறேன். என்னை நானே ரசிக்கும்போது மற்றவர்கள் ரசிக்கமாட்டார்களா என்ன என்றும் கேள்வி கேட்கிறார் வித்யாபாலன்.

அதுமட்டுமின்றி, இப்போதைய ஆண்களும், திருமணமான பெண்களைத்தான் அதிகமாக ரசிக்கிறார்கள். அதற்கு காரணம், திருமணத்துக்குப்பிறகுதான் பெண்கள் தங்கள் அழகில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதனால்தான் அவர்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள் ஆண்கள். அதனால் நானும் முன்பைவிட எனது அழகை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். மேலும், குழந்தையே பெற்றுக்கொண்டாலும் எனது அழகை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். அதனால், என்னை ரசிகர்கள் ரசிக்கிற காலம் வரை சினிமாவில் கதாநாயகியாக அரிதாரம் பூசிக்கொண்டேயிருப்பேன் என்கிறார் வித்யாபாலன்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget