கிரகங்கள் 9
1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. இராகு
9. கேது
ராசிகள் 12
1. மேஷம்
2. ரிஷபம்
3. மிதுனம்
4. கடகம்
5. சிம்மம்
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனுசு
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்
ஏற்கனவே கூறியபடி வான்வெளியை 12 பாகமாக பிரித்தால்,அதனை 12 ராசியாக கொள்ளலாம். 1 பாகத்துக்கு 30 பாகை வரும். ஏனெனில் வட்டத்திற்கு 360 பாகை என்பது அனைவருக்கும் அறிந்ததே. அறியாதவர்கள், 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் வரைகருவிப் பெட்டியை (அதாங்க ஜியாமெட்ரி பாக்ஸ்) வாங்கி பார்த்தால், அதில் ஒரு அரை வட்டம் (பாகைமானி) இருக்கும். அதில் 0 முதல் 180 பாகை வரை குறிக்கப்பட்டு இருக்கும். அரைவட்டத்திற்கு 180 பாகை என்றால், முழு வட்டத்திற்கு 360 பாகையாகும். அந்த 360 பாகையை 12 சம பாகமாக பிரித்தால, 1 பாகத்திற்கு 30 பாகை வரும். இந்த 30 பாகையே ஒரு ராசியின் அளவாகும்.
அன்பரே ! கையில் பேப்பர் வைத்து இருந்தால் அதில் ஒரு வட்டம் வரைந்து, அதனை 12 பாகமாக பிரித்து வரைந்து பார்க்கவும். வட்டம் சில சமயம் கோழிமுட்டை வடிவில் அமையும், பார்க்க அழகாக இருக்காது. அதனால் தமிழர்கள் புத்திசாலிகள், சிரமமாக இருக்கும் எந்த வேலைக்கும் மாற்று வழி கண்டு பிடித்து விடுவார்கள். அவர்கள் பின் வருமாறு சதுரம் வரைந்து, அதனை 12 பாகமாக பிரித்து, சில நொடிகளில் எளிதாக வரைந்து விடுவார்கள்.
தென்னிந்தியா முழுமைக்கும், இந்த வகையிலேயே பயன்படுத்தப் படுவதுவதால் தான் இது நம்மவர்கள் கண்டுபிடிப்பு என்று கூறுகிறேன். தென்னிந்தியாவில் உள்ள, எந்த மொழியிலும், கலை இலக்கியங்களிலும், கலாசாரத்திலும், பழக்க வழக்கங்களிலும், தமிழின் தாக்கம், தமிழரின் பங்கு இருப்பது அறிவியல் முறைப்படி நிரூபணம் ஆகியுள்ளதால் தான், தமிழ் உலக மொழிகளில் பழமை வாய்ந்த 6 மொழிகளில் ஒன்று என செம்மொழி அந்தஸ்து கிடைத்து உள்ளது. (உலகில் உள்ள மற்ற 5 செம்மொழிகள் எவை என்று தெரியுமா? கிரேக்கம், இலத்தீன், அரபி, சமஸ்கிருதம், சீனமொழி).
சரி இப்பொழுது ஜோதிடத்திற்கு வருவோம். வரைவதற்கு எளிதாக இருக்கவேண்டும் என்பதற்காக பின்வரும் முறையில், வரைந்து பழகுவோம். மேஷ ராசி எந்த கட்டத்தில் இருந்து தொடங்குகிறது என்று சற்று ஊன்றி கவனிக்கவும். அதில் இருந்து ஒவ்வொரு ராசியாக எழுதி பழகினால் போதும். இந்த பாடத்தில் உள்ள விவரங்களையும், ராசி சக்கரத்தையும் இப்போதைக்கு வரைந்து பழகுங்கள். விரைவில் மீண்டும் சந்திப்போம்.

12
மீனம்
|
1
மேஷம்
|
2
ரிஷபம்
|
3
மிதுனம்
|
11
கும்பம்
|
ராசிகள் 12
|
4
கடகம்
|
|
10
மகரம்
|
5
சிம்மம்
|
||
9
தனுசு
|
8
விருச்சிகம்
|
7
துலாம்
|
6
கன்னி
|