ஐஸ்வர்யா அர்ஜுன் அசத்தல் பேட்டி

ஆக்ஷ்ன் கிங் அர்ஜூனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்திருப்பவர் ஐஸ்வர்யா அர்ஜூன். முதல்படம் விஷால் உடன் ‘‘பட்டத்து யானை’’. இப்படம் வருகிற 26ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. முதல்படம் தனக்கு எந்தமாதிரியான ரிசல்‌ட்டை கொடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்புடனும், சிறு பதட்டத்துடனும் இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* சினிமாவுக்கு வரணும் என்றஆசை எப்ப வந்தது?

சின்ன வயசிலேயே இருந்தது. பள்ளியில் படிக்கும்போதே,வாய்ப்புகள் வந்தன. ஆனால், படிப்பை விட்டுடக்கூடாது என்ற முடிவோடு வீட்டில் இருந்தேன்.படிப்பை முடித்த பின், இது சரியான நேரம் என்று கருதி, களத்தில் இறங்கி விட்டேன்.

* அப்பா அர்ஜுன், உங்களுக்குஅறிவுரை வழங்கினாரா?

கடினமாக உழைக்க வேண்டும் என்பதை, அடிக்கடி கூறுவார். நடிப்பு விஷயத்தில் தலையிட மாட்டார். "படப்பிடிப்பின் போது, நீயாகவே தெரிந்து கொள் என,கூறி விட்டார். அம்மா, என் கூட படப்பிடிப்புக்கு வருவாங்க. அவங்ககிட்ட சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சிப்பேன்.

* சினிமாவில் உங்களின் ரோல் மாடல் யார்?

ஸ்ரீதேவி மேடம் நடித்த படங்களை அதிகமாக பார்ப்பேன். சமீபத்தில், ‘‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’’ படம் பார்த்தேன். அவங்க நடிப்பு, டான்ஸ், பேசும் விதம் எனக்கு பிடிக்கும். இப்படியெல்லாம் நடிக்க முடியுமான்னு பல கேரக்டர்களை மனக்குள் கொண்டு வந்து நிறுத்தினவங்க, ஸ்ரீதேவி மேடம்.

* நீங்க அப்பா செல்லமா,அம்மா செல்லமா?

நிறைய விஷயங்களை அம்மாவிடம் பேசுவேன். அவங்க, எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்திருங்காங்க. ஆனாலும், நான் அப்பா செல்லம் தான்.

* சினிமா தவிர?

டான்ஸ் ரொம்ப பிடிக்கும். கிடைக்கும்நேரத்தில், புத்தகங்கள் படிப்பேன். நிறைய பயணம் செய்வது பிடிக்கும். நல்லா சாப்பிடுவேன். (ஆனால்,உடம்பை பார்த்தா, அப்படி தெரியவில்லையே)

* நீங்க எந்த மாதிரியான டைப்?

எனக்கு இரண்டு முகம் இருக்கு. ரொம்பஅமைதியா இருப்பேன். இல்லைன்னா ரொம்ப ஆர்ப்பாட்டமா இருப்பேன். மூடுக்கு தகுந்த மாதிரி என்னை மாத்திப்பேன். இப்படி தான் இருப்பேன் என, உறுதியாக கூற முடியாது.

* "பட்டத்து யானை படம் வெளியாகஉள்ளது. உங்களுக்கு பயம், பதட்டம் இருக்கா?

பெரிய அளவு பதட்டம் இல்லை. தெளிவாக இருக்கேன். அப்பா, அம்மாவுக்கு கொஞ்சம் டென்ஷன் இருக்கலாம். எனக்கு இல்லை. படம் வெளியாவதற்கு, முதல் நாள் வேண்டுமானால், சின்னதா பயம் வரும்னு நினைக்கிறேன்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget