3. தீயா வேலை செய்யணும் குமாரு : சுந்தர் சி.யின் படம் இன்னமும் டாப் 3ல் இருப்பதற்கு காரணம் நல்ல படங்கள் எதுவும் போட்டிக்கு இல்லை என்பதால்தான். வார இறுதியில் 56,000 ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. வார நாட்களில் 1.9 லட்சங்கள். இதுவரை மொத்தம் 5.5 கோடிகளை இப்படம் சென்னையில் வசூலித்துள்ளது.
2. சிங்கம் 2 : சிங்கத்தின் கர்ஜனை இன்னும் ஆக்ரோஷமாகதான் இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக, வார இறுதியில் ஒரு கோடிக்கு மேல் வசூலித்து வாங்கியவர்களுக்கும், விற்றவர்களுக்கும் பால் வார்த்திருக்கிறது. சென்ற வார இறுதியில் 1.22 கோடிகளையும், வார நாட்களில் 1.9 கோடியையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 10.33 கோடிகள். மரியானின் ரிலீஸுக்குப் பிறகும் வார இறுதியில் ஒரு கோடிக்கு மேல் வசூலித்தது ஆச்சரியமே.
1. மரியான் : எதிர்பார்த்ததைவிட குறைவாகவே ஓபனிங்கில் வசூல் செய்திருக்கிறது மரியான். சென்னையில் முதல் மூன்று தின வசூல் 1.63 கோடி. சிங்கம் 2வின் முதல் மூன்றுதின வசூல் 2.7 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.