சிம்பு நீதான் என் அம்பு - ஹன்சிகா

எஸ், நான் சிம்புவை காதலிக்கிறேன், அடுத்த வருஷம் திருமணம் என்று போல்டாக பேசிய ஹன்சிகா இப்போது திடீரென்று பல்டியடித்திருக்கிறார். சினிமா நட்சத்திரங்களின் காதல், வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போலதான் எப்போது பிரகாசிக்கும், எப்போது பாய்ந்து மறையும், தெரியாது. கல்யாணத்துக்கு முதல்நாள்வரை, எங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் என்று ஜல்லியடிப்பவர்களுக்கு மத்தியில், ஆமாம் நாங்க
காதலிக்கிறோம் என்று ஹன்சிகா சொன்னது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் அதுவே....

இப்போது ஹன்சிகாவின் மார்க்கெட்டுக்கு உலை வைத்திருக்கிறது. 

காதலிக்கிறாங்க…... சட்டுன்னு கல்யாணம் பண்ணிகிட்டா, நம்ம படம் என்னாகிறது என்று ஹன்சிகா ஒப்பந்தம் செய்தவர்கள் யோசிக்கிறார்கள். புதிதாக யாருக்கும் அவரை படத்தில் நடிக்க வைக்க விரும்பவில்லை. பீக்கில் இருக்கிற நேரம் இப்படி பீல்ட் அவுட் ஆகணுமா என்பது நேர்மையான அறிவுரைதான். 

எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்த ஹன்சிகா, காதலிக்கிறோம், ஆனா கல்யாணம் ஐந்து வருஷத்துக்கு பிறகுதான் என மாற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்.

அதுவும் நல்ல முடிவுதான். சிம்பு காத்திருப்பாரா?
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget