பாலிவுட், கோலிவுட் என, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பல ஹிட் படங்களை கொடுத்த ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சனை திருமணம் செய்தபின்னும், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால், குழந்தை பிறந்த பின், நடிப்புக்கு தடா போட்டு விட்டார். இடையில், ஒரு சில இயக்குனர்கள் வற்புறுத்தியும்,நடிக்க மறுத்து விட்டார். இப்போது, குழந்தை, ஓரளவுக்கு வளர்ந்து விட்டதால், அவரின் கவனம், மீண்டும் திரையுலகத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
பாலிவுட்டின் இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும், "ராம்லீலா என்ற படத்தில், ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு ஆடப் போகிறாராம், ஐஸ். ரன்பீர் கபூர் - தீபிகா நடிக்கும் இந்த படத்தில், ஐஸ் ஆடப் போகும் குத்துப் பாடல், மிகவும் பிரபலமாகும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளாராம்,இயக்குனர். ஆனாலும், படத்தில் நடிப்பது குறித்து, இன்னும் முழு சம்மதம் கூறவில்லையாம், ஐஸ்வர்யா.